Share

Saturday, March 21, 2015

DTP(டெஸ்க்டாப் பப்ளிஷிங்) துறையில் வேலை வாய்ப்புகள் எப்படி?

Image result for DTPபொதுவாக இன்று பட்டப்படிப்பு கூட படிக்க முடியாத இளைஞர்கள் பலர் சென்றடையும் துறையாக இருப்பது டி.டி.பி., தான்.

 முறையாகப் படித்து சரியான பயிற்சிக்குப் பின் சிறப்பான திறன் பெறுபவருக்கு டி.டி.பி., துறை வாய்ப்புகளை அள்ளித் தரும் துறை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பொதுவாக டி.டி.பி., படிப்பவர்களில் பலரும் போதிய ஆங்கிலத் திறன் இல்லாதவராகவே தங்களை வைத்துக் கொள்கிறார்கள். முன்பு பிளஸ் 2 வரை படித்தவர் தட்டச்சு படித்து விட்டு எங்காவது டேட்டா என்ட்ரி வேலை செய்தது போல இப்போது இதே போன்ற இளைஞர்கள் டி.டி.பி.,யைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் அடிப்படையில் சிறப்பான கற்பனைத் திறன், கிரியேடிவ் எண்ணம் மற்றும் போதிய ஆங்கில அறிவுத் திறனை ஒருவர் பெறும் போது அவர் டி.டி.பி., துறையில் மிளிர முடியும்.

டி.டி.பி. என அழைக்கப்படும் இத்துறையில் பணி வாய்ப்புகள் இன்று ஏராளமாக இருக்கின்றன. உங்களது பொருளாதார மற்றும் சமூகச் சூழலின் அடிப்படையில் பார்த்தால், இது உங்களுக்கு உகந்த துறை தான். போட்டோஷாப், பேஜ்மேக்கர், கோரல்டிரா போன்ற படிப்புகள் இதில் பொதுவாக இடம் பெறுகின்றன. இதில் இன்று எண்ணற்ற பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால் பெரும்பாலான பயிற்சி நிறுவனங்களில் சரியான திறனில்லாத ஆசிரியர்களே பயிற்சியைத் தருகின்றனர்.

அப்படியே திறனுள்ள ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்களுக்கு சரியான சம்பளம் தரப்படுவதில்லை. எனவே பொதுவாக டி.டி.பி., பயிற்சி மையங்கள் பலவற்றிலும் அரைவேக்காட்டு பயிற்சியாளர்களே இருக்கின்றனர். அரசுத் துறையில் உங்களைப் போன்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருக்கு இலவச டி.டி.பி., பயிற்சி தரப்படுகிறது. இதற்கு பிளஸ் 2 முடித்திருப்பது அவசியம். முழு விபரங்களை பின்வரும் முகவரியில் பெறலாம்.

தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் டிரெய்னிங் சென்டர்,
42/25 ஜி.ஜி., காம்ப்ளக்ஸ், 2வது மாடி,
வி.ஜி.பி., அருகே, சென்னை 600 002.
தொலைபேசி: 044-28527579 மற்றும் 28414736.

0 கருத்துரைகள்: