Share

Thursday, March 26, 2015

பெரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வேலை வாய்ப்பு முகாம்

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மார்ச் மாதம் 21 மற்றும் 22ம் தேதிகளில் மெகா வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் இந்தியாவின் பிரபலமான தொழில் நிறுவனங்களாகிய இன்போசிஸ், ஐபிஎம், ஹெச்சிஎல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கு பெற்று பணி வாய்ப்பு பெற்றனர்.

வேலை வாய்ப்பு முகாமை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் ஆர். கோட்டீஸ்வரன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கல்லூரியின் தலைவர் சரவ் பெரியசாமி பேசுகையில், தனியார் நிறுவனங்களின் நிர்வாக ஆளுமைக்கு சிறந்த மாணவ, மாணவிகளை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், இக்கல்லூரியை துவக்கியதாகவும், அடுத்த தலைமுறை இளைஞர்களை பன்னாட்டு குடிமக்களாக உயர்த்திக் காட்டும் ஒரு முயற்சியில் பல்வேறு பாடப் பிரிவுகளிலும், துறைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்களை பணியில் அமர்த்தியிருப்பதாகக் கூறினார்.

இந்த முகாமின் வரவேற்புரையை கல்லூரியின் வேலை வாய்ப்பு அதிகாரி சி.டி. ராஜகணபதியும், நன்றியுரையை கல்லூரியின் முதல்வர் ஆர். கௌசல்யா தேவியும் ஆற்றின

0 கருத்துரைகள்: