Share

Wednesday, March 18, 2015

யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா?

மத்திய கனிமவள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Geological Survey  of India மற்றும் மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Central  Ground Water Board ஆகிய துறைகளில் காலியாக உள்ள ஜியாலஜிஸ்ட் பணியிடங்கள் யுபிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வு 2 பிரிவுகளுக்கான பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. 

இதில் கேட்டகிரி - 1 என்பது மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள Geological  Survey of Indiaவில் உள்ள பணியிடங்களுக்கு உரியது. 

கேட்டகிரி - 2 பிரிவு Central Ground Water Board துறையில் உள்ள பணியிடங்களுக்கானது.

கேட்டகிரி - 1:

அ. Geologist Group A:

150 இடங்கள். 


தகுதி:

Geological Science/ Geology/ Applied Geology/ Geo  Exploration/ Mineral Exploration/  Engineering Geology/ Marine Geology/ Earth  Science and Resource Management/  Oceanography and Coastal Areas Studies/ Petroleum Geo Science/ Petroleum Exploration/ Geo chemistry/ Geological Technology/ Geo  physical Technology ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம்.


ஆ. Geo physicist, Group A:

40 இடங்கள். 


தகுதி:

Physics/ Applied physics/ Geo physics/  Exploration Geophysics (Integrated M.Sc.,)/  Applied Geophysics/ Marine Geophysics ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் எம்.எஸ்சி. பட்டம்.


இ. Chemist, Group A:

50 இடங்கள். 


தகுதி:

Chemistry/ Applied chemistry/ Analytical  Chemistry பிரிவில் எம்.எஸ்சி. பட்டம்.

வயது வரம்பு:

மேற்கண்ட 3 பணிகளுக்கும் 1.1.2015 தேதிப்படி 21 லிருந்து 32க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.1.1983க்கு முன்னரோ அல்லது 1.1.1994க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது.

கேட்டகிரி - 2:

Central Ground Water Board Junior  Hydro-geologists (Scientist B) Group A: 

29 காலியிடங்கள். 


தகுதி:

Geology/ Applied Geology/ Marine Geology/  Hydro geology பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம். 

வயது வரம்பு: 

1.1.2015 தேதிப்படி 21 லிருந்து 35க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.1.1980க்கு முன்னரோ அல்லது 1.1.1994க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது. அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும்மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.


தேர்வு கட்டணம்:

ரூ.200. இதை செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்தலாம் அல்லது பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் பைகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப்  ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளில் ஏதாவது ஒன்றில் விசா, மாஸ்டர், கிரெடிட்/ டெபிட் கார்டை  பயன்படுத்தி நெட் பேங்கிங் முறையில் செலுத்தலாம்.

எஸ்சி, எஸ்டியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.  தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.3.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 23.5.2015

0 கருத்துரைகள்: