Share

Friday, March 20, 2015

உதவியாளர், சுகாதார மேற்பார்வையாளர் காலி பணிக்கு பதிவு மூப்பு விபரம்

Image result for சுகாதார மேற்பார்வையாளர்உதவியாளர்,சுகாதார மேற்பார்வையாளர் காலி பணிக்கு பதிவு மூப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளதாக" சிவகங்கை வேலை வாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: பாடநூல் கழகத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கு, பிற்பட்ட பெண்கள் முன்னுரிமையற்ற பட்டதாரி, 28.07.2003 வரை, மாற்றுத்திறனாளி பிற்பட்ட பெண் பட்டதாரி 28.06.1994 வரை பரிந்துரை செய்யப்பட உள்ளனர். வயது 31.07.2014 அன்று 32க்குள்.

வக்பு வாரியம் அறிவித்துள்ள 2 இளநிலை உதவியாளர் பணிக்கு, பட்டதாரி, முஸ்லிம் ஆண்கள் முன்னுரிமையற்றவர் 26.07.2006 வரை, முஸ்லிம் ஆண்கள் மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் 22.05.2000 வரை. வயது 01.07.2015 அன்று 32க்குள். தேவகோட்டை நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ள ஒரு சுகாதார மேற்பார்வையாளர் பணிக்கு மிக பிற்பட்ட ஆண், பெண் ஆதரவற்ற விதவைகள் 13.03.2015 வரை, கலப்பு திருமணம் செய்தவர் 09.08.2006 வரை.

கல்வி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி. வயது 01.07.2013 ஆதரவற்ற விதவை 35க்குள். இத்தகுதி உள்ளோர் உரிய சான்று, பதிவு அட்டையுடன் மார்ச் 26 அன்று வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக வந்து தெரிந்து கொள்ளலாம், என்றார்.

0 கருத்துரைகள்: