Share

Sunday, March 22, 2015

இஸ்லாமிய மாணவர்களுக்கு உதவித் தொகை

இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் உயர்கல்வி பயில விரும்பும் இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி
ஏழ்மை நிலையில் உள்ள, கல்வியில் ஆர்வம் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். உயர்நிலைப் பள்ளியில் உருது அல்லது ஆங்கில வழிக் கல்வி பயின்றிருக்க வேண்டும்.

உயர்கல்வி
மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு www.irf.net.in என்ற  இணைய தளத்தை காணவும்.

0 கருத்துரைகள்: