Share

Wednesday, March 18, 2015

பி.இ, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இந்திய உணவுக் கழகத்தில் 4,318 இடங்கள்

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்  பொருட்களை சேமித்து வைப்பது, விநியோகிப்பது ஆகிய பணிகளை இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது. இந்திய உணவுக் கழகம் வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4,318 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்: (அனைத்து மண்டலங்களும் சேர்த்து)

1. ஜூனியர் இன்ஜினியர் (சிவில் இன்ஜினியரிங்):

66 இடங்கள். 


தகுதி: 

சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., அல்லது டிப்ளமோ தகுதியுடன் ஒரு வருட அனுபவம். 

வயது:

1.1.2015 அன்று 28க்குள்.


2. ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்):

16 இடங்கள். 


தகுதி: 

எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., அல்லது டிப்ளமோ மற்றும் ஒரு வருட பணி அனுபவம். 

வயது: 

1.1.2015 அன்று 28க்குள்.


3.
ஜூனியர் இன்ஜினியர் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்):

6 இடங்கள். 


தகுதி: 

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., அல்லது டிப்ளமோ மற்றும் ஒரு வருட பணி அனுபவம். 

வயது: 

1.1.2015 அன்று 28க்குள்.


4.
அசிஸ்டென்ட் கிரேடு - 2 (இந்தி):

54 இடங்கள். 


தகுதி: 

இந்தியை முக்கிய பாடமாகக் கொண்டு பட்டப்படிப்புடன் ஆங்கில அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்திலிருந்து இந்தியிலும், இந்தியிலிருந்து ஆங்கிலத்திலும் மொழி பெயர்ப்பதில் ஒரு ஆண்டு அனுபவம். 

வயது: 

1.1.2015 அன்று 28க்கள்.


5.
டைப்பிஸ்ட் (இந்தி):

100 இடங்கள். 


தகுதி: 

பட்டப்படிப்புடன் இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் ஆங்கில டைப்பிங் மற்றும் கம்ப்யூட்டர் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

வயது: 

1.1.2015 அன்று 25க்குள்.


6. அசிஸ்டென்ட் கிரேடு - 3: (பொது) 

699 இடங்கள். 


தகுதி: 

ஏதாவது ஒரு பட்டத்துடன் கம்ப்யூட்டர் அறிவை பெற்றிருக்க வேண்டும். 

வயது: 

1.1.2015 அன்று 27க்குள்.


7.
அசிஸ்டென்ட் கிரேடு - 3 (அக்கவுன்ட்ஸ்):

296 இடங்கள். 


தகுதி: 

பி.காம். முடித்திருப'பதுடன் கம்ப்யூட்டர் அறிவையும் பெற்றிருக்க வேண்டும். 

வயது: 

1.1.2015 அன்று 27க்குள்.


8.
அசிஸ்டென்ட் கிரேடு - 3 (டெக்னிக்கல்):

1429 இடங்கள். 


தகுதி: 

பிஎஸ்சி வேளாண்மை அல்லது தாவரவியல்/ பயோ கெமிஸ்ட்ரி/ மைக்ரோ பயாலஜி/ உணவு அறிவியல்/ உணவு அறிவியல் அல்லது தொழில்நுட்பம்/ வேளாண்மை பொறியியல்/ பயோ டெக்னாலஜி பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் பி.இ.,/ பி.டெக்., மற்றும் கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும். 

வயது: 

1.1.2015 அன்று 27க்குள்.


9. அசிஸ்டென்ட் கிரேடு - 3 (பண்டகசாலை):

1652 இடங்கள். 


தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும். 

வயது: 

1.1.2015 அன்று 27க்குள்.


விண்ணப்ப கட்டணம்:

ரூ.350. இதை இன்டர்நெட் பேங்கிங் அல்லது செலான் முறையில் செலுத்தலாம்.

எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

மண்டல வாரியாக இடங்கள், இட ஒதுக்கீட்டு விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் www.fcijobsportal.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தென் மண்டலத்திற்குரிய காலியிடங்களுக்கு பெங்களூர், சென்னை, ஐதராபாத், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

இன்டர்நெட் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 17.3.2015.

செலான் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 18.3.2015.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.3.2015.

0 கருத்துரைகள்: