Share

Monday, March 23, 2015

முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப 28ம் தேதி ஆன்லைன் கவுன்சிலிங் 28ம் தேதி நடக்கிறது.

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,789 பணியிடங்களை நிரப்ப, ஆன்லைன் கவுன்சிலிங், வரும் 28ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் தேர்வான 1,789 பேருக்கு பணி நியமனம் வழங்குவதற்கான ஆன்லைன் கவுன்சிலிங், வரும் 28ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கிறது.

டி.ஆர்.பி.,யின் வரிசை எண் படி கவுன்சிலிங் நடக்கும். முதலில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும், பின், வேறு மாவட்டத்தில் இருந்து, அந்த மாவட்டத்தில் பணிபுரிய விரும்புவோருக்கும் கலந்தாய்வு நடக்கும்.

சான்றிதழ்களுடன்...

தேர்வானவர்கள், ஹால் டிக்கெட் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன், விண்ணப்பத்தில் முகவரி குறிப்பிட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, காலை 9:30 மணிக்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்: