Share

Sunday, February 22, 2015

நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வெல்வதற்கான உயிர் ஆற்றல்!

ஒவ்வொரு விதையின் உள்ளேயும், அது முளைத்து வெளியே வருவதற்கான உயிர்ச்சக்தி இருப்பது போல, நமக்குள்ளும் வெல்வதற்கான உயிர் ஆற்றல் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதனை அடையாளம் காணும் முயற்சியே லட்சிய வேட்கை.

இவை ஏற்படும்போது மனதுக்குள் ஒரு தேடல் நிகழும். அதன் மூலம் நமது திறமைகள் ஒவ்வொன்றாக வெளிப்படத் தொடங்கும். அனைவருமே வெற்றி பெறவே பிறந்து இருக்கிறோம்.

மாறாக தோல்விக்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க அல்ல. வெற்றிக்குத் தேவையான அனைத்து திறமைகளும் இயற்கையாகவே நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவை விதைகளாகவே உள்ளன. விதை வடிவில் உள்ள திறமைகளை எடுத்து உழைப்பு என்கிற நிலத்தில் ஊன்றி, முயற்சி என்கிற நீரைப் பாய்ச்சி, களைப்பு என்கிற களையை நீக்கினால் வெற்றி நிச்சயம்.

உழைப்புத்தான் முன்னேற்றத்தின் உயிரோட்டம். புத்திசாலித்தனமான உழைப்புக்கு முன், எந்தத் தடைகளும் முன்னேற்றத்தை தடுத்துவிடாது.

0 கருத்துரைகள்: