Share

Monday, February 16, 2015

ஸ்மார்ட்ஃபோன்களை வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க போதிய விழிப்புணர்வு இல்லை எனத் தகவல்

இந்தியாவில் கணினி, கையடக்கக் கணினி மட்டுமின்றி  ஸ்மார்ட் ஃபோன்களை வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இணையதள பயன்பாட்டின்போது, முன்னெச்சரிக்கை இல்லாததால், வைரஸ்கள் பரவி ஆவணங்களை அழித்தும், கருவியை செயலிழக்கச் செய்தும் வருவதாக பிரபல ஆன்ட்டி வைரஸ் தயாரிப்பு நிறுவனமான கே செவன் தெரிவித்துள்ளது. இணையதளம் பயன்படுத்தும்போது, தினமும் சராசரி ஒரு வைரஸ் நுழைவதாகவும், இதை தவிர்க்க ஆன்ட்டி வைரஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றும் நிறுவனத்தின் செயல் அதிகாரி கேசவர்த்தனன் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்: