Share

Tuesday, February 10, 2015

கல்வி நிறுவனங்களில் அழகிப் போட்டிகள் நடத்தக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


கல்வி நிறுவனங்களில் அழகிப் போட்டிகள் நடத்தக் கூடாது என உடனடியாக சுற்றறிக்கை அனுப்புமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை, தாமே முன் வந்து உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதனை விசாரித்த நீதிபதி சிவஞானம், அழகி மற்றும் ஆணழகன் போட்டிகளை, பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்துவது ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளார். இந்த மாதிரியான அழகிப் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். இது குறித்து உடனடியாக சுற்றறிக்கை அனுப்புமாறும், தமிழக அரசுக்கு நீதிபதி ஆணையிட்டார். முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி அப்ஸராவின் தாய், உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அதில், கடந்த 2013-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த அழகிப் போட்டியில், தமது மகள் முதலிடம் பிடித்ததாக தெரிவித்துள்ளார். அவருக்கு வழங்குவதாக அறிவித்த 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, இதுவரை கொடுக்கப்படவில்லை எனவும், அதனை உடனே வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அப்ஸராவின் தாய் வலியுறுத்திள்ளார்.

0 கருத்துரைகள்: