Share

Wednesday, February 25, 2015

அமெரிக்கவில் வேலை: எச்-1பி விசா வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எச்-1பி விசா வைத்துள்ள வெளி நாட்டு ஊழியர்களின் தகுதியுள்ள துணைவருக்கு  (கணவன் அல்லது மனைவி) வேலை செய்ய அனுமதி
வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவை இந்திய-அமெரிக்கர்கள் வரவேற்றுள்ளனர். ஏனெனில் எச்-1பி விசா வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தி யர்கள் ஆவர்.

இப்போது உள்ள சட்டத்தின்படி எச்-1பி விசா வைத் திருப்பவர்களின் துணைவர் வேலை செய்வதற்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) துறை வெளியிட்டுள்ள அறிக் கையில், “எச்-1பி விசா வைத் துள்ள வெளிநாட்டு ஊழியர்களின் துணைவர்கள் (கணவன் அல்லது மனைவி) வேலை அடிப்படையில் நிரந்தரமாக தங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று வேலை விசா வழங்கப்படும்.

வரும் மே 26-ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும். இந்த ‘ஐ-765 விண்ணப்பம்’ யுஎஸ்சிஐஎஸ் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் துணைவருக்கு வேலை அனுமதி அட்டை (எச்-4) வழங்கப்படும். அதன்பிறகு அவர்கள் அமெரிக்காவில் பணிபுரியலாம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைப்படி முதல் ஆண்டில் வேலை செய்ய அனுமதி கேட்டு 1,79,600 பேர் விண்ணப்பம் செய்ய தகுதி பெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் பேர் விண்ணப்பிக்க முடியும்.

0 கருத்துரைகள்: