Share

Wednesday, January 28, 2015

இந்திய மாணவர்களுக்கான ஐ.இ.எல்.டி.எஸ். எண்ணிக்கை உயர்வு!

IELTS விருதுகள் ஏற்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியாவதைத் தொடர்ந்து, இந்திய மாணவர்களுக்கான IELTS விருதுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இந்திய மாணவர்களுக்கு, ஆண்டிற்கு மொத்தம் 8 IELTS விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 10ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

IELTS விருதுகள், பிரிட்டிஷ் கவுன்சிலால், தெற்காசிய மாணவர்களுக்காக, அவர்களின் ஆங்கில மொழித்திறனை சோதித்து, அதன் பொருட்டு வழங்கப்படுபவை. ஆனால் இதுவரை அந்த விருதுகள், நேபாளம் மற்றும் பூடான் நாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை. ஆனால், புதிய அறிவிப்பின்படி, அந்நாட்டு மாணவர்களும் இனிமேல், IELTS விருதுகளைப் பெற்று, வெளிநாடுகளுக்கு (குறிப்பாக, ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு) கல்வி கற்க செல்லலாம்.

பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் ஒரு IELTS விருதின் மதிப்பு, இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் ஆகும். இதன்மூலம், இந்த விருதைப் பெற்று வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் ஒரு இந்திய மாணவர், பட்டப் படிப்பிற்கான கட்டணத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த IELTS விருதை, உலகம் முழுவதும், 9000க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.
விரிவான தகவல்களுக்கு www.britishcouncil.in/exam/ielts/awards

0 கருத்துரைகள்: