Share

Monday, January 5, 2015

சிறப்பு பிரிவு மாணவர்கள் 7 பேர் பத்து பதக்கங்கள்

பள்ளி மாணவர்கள் பலரிடம் பல திறமைகள் உள்ளன. அந்த திறமையைக் கண்டறிந்து, அவர்களை சரியாக வழிநடத்தி சென்றால் மாணவர்கள் ஜொலிப்பார்கள். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சரியான புரிதல் வேண்டும். அப்போது தான் மாணவர்களிடம் உள்ள திறமையை கண்டறிந்து, அவர்களை வெற்றி பாதைக்குக் கொண்டு செல்ல இயலும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில் பயிலும், காது கேட்காத, வாய் பேச இயலாத மாணவ மாணவிகள் 7 பேர் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பத்து பதக்கங்களைப் பெற்றுவந்துள்ளனர்.

இந்த மாணவ மாணவிகள் தமிழக அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இவர்கள் ஒரிஸô மாநிலம் புவனேஸ்வரில் நவம்பர் முதல் ஐந்தாம் தேதி வரை, மத்திய அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் ஸ்பெஷல் ஒலிம்பிக் பாரத் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள். அப்பள்ளித் தலைமை ஆசிரியர் கே.பால்ராஜ், பயிற்சியாளர் டி.கிருஸ்டோபர் ஆகியோர் இந்த

மாணவர்களின் வெற்றி குறித்து கூறியதாவது:

"100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் எம்.தனலட்சுமி தங்க பதக்கமும், வேல்முருகன் 200 மற்றும் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தலா ஒரு தங்கபதக்கமும், குண்டு எறிதலில் எஸ்.சிவகுமார் தங்க பதக்கமும், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் எஸ்.சுபலட்சுமி தங்க பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், ஒற்றையர் இறகுபந்துபோட்டியில் கே.சுப்புலட்சுமி வெள்ளி பதக்கமும், ஒற்றையர் ஆண்கள் பிரிவு இறகு பந்து போட்டியில் டி.பாபு வெங்கலப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பி.ராக்கப்பன் வெங்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர். மேலும் எஸ்.சுபலெட்சுமி சிறந்த தடகள வீரங்கனை என தேர்வு செய்து அதற்கு ஒரு தங்கப் பகத்தமும் பெற்றுள்ளார். மொத்தத்தில் 6 தங்கப்பதக்கம், இரு வெள்ளிப் பதக்கம், இரு வெங்கலப் பதக்கம் என பத்துபதகங்களை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

9.10.2014 அன்று விருதுநகரில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளப்போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் எங்கள் பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பாக விளையாடி பல பரிசுகளைப் பெற்றனர். இப்போட்டியைப் பார்வையிட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஒலிம்பிக் மண்டல இயக்குனர் பால்தேவசகாயம் வந்திருந்தார். அவரே தேர்வு கமிட்டித்தலைவராகவும் உள்ளார். எனவே எங்கள் பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடியதை நேரில் பார்த்த அவர், தேசிய அளவிலான போட்டிக்கு மாணவர்களைத் தேர்வு செய்தார்.

விளையாட்டில் பங்குபெறும் மாணவ,மாணவிகளுக்கும் தினசரி மாலை 5மணிமுதல் 6மணிவரை விளையாட்டுப் பயிற்சியை அளித்து வருகிறோம். மாநில அளவிலான போட்டிக்கும், தேசிய அளவிலான போட்டிக்கும் போட்டி நடைபெறும் ஒரு மாதத்திற்கு முன்பு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மட்டும் காலை 5.30 மணிமுதல், 7.30 மணிவரையிலும், மாலை 3மணிமுதல் 6மணிவரையிலும் பயிற்சிஅளிப்போம்.

இந்த மாணவர்களுக்கு முட்டை, பால், சுண்டல் ஆகியவை சிறப்பு உணவாக வழங்குவோம். மாற்றுத்திறனாளிகளான இந்த மாணவர்கள் உடனடியாக கிரகிக்கும் தன்மை உடையவர்கள். நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமோ அதனை அப்படியே பின்பற்றி விடுவார்கள். எனவே பயிற்சியின் போது தவறு ஏற்படாமல் பயிற்சியளிக்க வேண்டும்.

ஒரிஸ வில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 23 மாநிலங்களைச் சேர்ந்த 650 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டிக்கு சென்று வர ரயில் கட்டணம், போட்டி நடைபெற்ற இடத்தில் தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவற்றை மத்திய அரசே செய்து கொடுத்தது. இதனால் போட்டியில் பங்கு பெற உற்சாகமாக சென்று வர முடிந்தது'' என்றார்கள்.

 - எஸ்.பாலசுந்தரராஜ்

0 கருத்துரைகள்: