Share

Monday, December 22, 2014

அண்ணா பல்கலை.யில் இலவச 6 மாத கால குளிர்சாதனப் பெட்டி தொழில் நுட்ப பயிற்சி

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாத கால குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி தொழில்நுட்பப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையமும், சென்னை தெற்கு ரோட்டரி சங்கமும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக வழங்கும் இந்த இலவசப் பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:
குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வித் தகுதி ஒன்றை வழங்கும் நோக்கத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சியில் மொத்தம் 50 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
பயிற்சி வகுப்பு 2015 ஜனவரி 3-ஆவது வாரத்தில் தொடங்கி 2015 ஜூன் மாதம் ரை நடத்தப்படும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சி.பி.டி.இ. வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 044 - 22358601.

0 கருத்துரைகள்: