Share

Wednesday, December 24, 2014

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணி

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழில் பழகுநர் சட்டம் 1961ன் விதிகளுக்குட்பட்டு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பணியின் விவரம்:

1. பயிற்சி விவரம்:


டெக்னிக்கல் அப்ரன்டிஸ் பயிற்சி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - 70, எலக்ட்ரிக்கல் - 60, சிவில் - 20, இன்ஸ்ட்ருமென்டேசன் - 10, கெமிக்கல் - 10, மைனிங் - 10, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் - 10, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 10, கமர்ஷியல் பிராக்டிஸ் - 10.

ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். மாதாந்திர உதவித் தொகை: ரூ.2,530.

தகுதி:


சம்பந்தப்பட்ட டிப்ளமோ இன்ஜினியரிங் பாடத்தில் 55 சதவீத தேர்ச்சி (எஸ்சி., எஸ்டியினருக்கு 50 சதவீத தேர்ச்சி போதும்). 31.01.2012க்கு பின் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. டெக்னீசியன் (வொகேஷனல்) அப்ரன்டிஸ் பயிற்சி:

குழந்தை கவனிப்பு மற்றும் சத்துணவு - 5. பல் மருத்துவம் - 5, பல் டெக்னீசியன் - 2, இசிஜி ஆடியோ மெட்ரிக் டெக்னீசியன் - 5, ஹெல்த் வொர்க்கர் - 15, மருத்துவ ஆவண உதவியாளர் - 10, மருத்துவமனை பராமரிப்பு - 25, பல்நோக்கு பணியாளர் - 15, கண் நோய் டெக்னீசியன் - 4, பார்மசிஸ்ட் - 10, பிசியோதெரபி - 9.

31.01.2012க்கு பின்னர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டுக்கு மேல் வேலை செய்த அனுபவம் இருக்கக் கூடாது.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:


துணை பொது மேலாளர்,
பணியாளர் மேம்பாட்டு மையம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம்-20, நெய்வேலி - 607803.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 
3.1.2015.

0 கருத்துரைகள்: