Share

Sunday, December 7, 2014

ஜிசாட்-16 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-16 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

பிரெஞ்சு கயானாவின் கௌரூ ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 2 மணி 10 நிமிடங்களுக்கு ஏரியன் 5 என்ற ராக்கெட் மூலம், ஜிசாட் 16 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டப்படி செயற்கைக்கோள் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் இயக்கம் நல்ல நிலையில் இருப்பதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.

முன்னதாக, மோசமான வானிலை காரணமாக இந்த செயற்கைக்கோள் ஏவப்படுவது இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இஸ்ரோ தயாரிப்பில் உருவான செயற்கைக்கோள்களில், ஜிசாட்-16 மட்டுமே அதிக எண்ணிக்கையிலான டிரான்ஸ்பாண்டர்களை சுமந்து கொண்டு செல்கிறது.

48 டிரான்ஸ்பாண்டர்களை கொண்ட இந்த செயற்கைக்கோள் மூலம் பொது மற்றும் தனியார் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ இயக்கங்களை மேம்படுத்த உதவும்.


0 கருத்துரைகள்: