Share

Wednesday, February 9, 2011

மக்கள் தொகை கணக்கெடுப்பு - ஒரு அவசர வேண்டுகோள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு - ஒரு அவசர வேண்டுகோள்

வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் தயவுசெய்து தங்களது வீட்டில்
உள்ள தாயிமார்களுக்கு தெரியப்படுத்தவும்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

இன்று முதல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது. கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சரியான விவரங்களை வழங்குமாறு அனைவரையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம்களை பொருத்தவரை மதம் என்னவென்ற கேள்விக்கு முஸ்லிம் என்றே பதிலளித்து பதிவுச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதங்கள் என்ற அட்டவணையின் கீழ் இஸ்லாம் என்று குறிப்பிடப்படாமல் முஸ்லிம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செய்த தவறாகும். இது குறித்து முஸ்லிம் சமுதாய அமைப்புகள் புகார் தெரிவித்தும் இது சரி செய்யப்படவில்லை. தற்போது நீதிமன்றம் சென்று முறையிடுவதற்கும் கால அவகாசம் இல்லை. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இஸ்லாம் என்று குறிப்பிட்டால் அது முஸ்லிம் என்ற கணக்கில் சேர்க்கப்படாமல் இதர மதத்தினர் பட்டியலில் சேர்க்கும் அபாயம் உள்ளது. எனவே கவனமாக மதம் என்ற கேள்விக்கு முஸ்லிம் என்ற பதிலை மட்டும் அளிக்குமாறு முஸ்லிம் சமுதாயத்தினரை கேட்டுக் கொள்கிறேன். இது பற்றிய விழிப்புணர்வை துண்டு பிரசுரங்கள், தெரு முனைப் பிரச்சாரங்கள், பள்ளிவாசல் அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டு்க் கொள்கிறேன். கண்ணியத்திற்குரிய இமாம்கள் இது குறித்து ஜுமஆவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


_

0 கருத்துரைகள்: