கல்வி உதவித் தொகையில் இந்துக்களுக்கும் சமநீதி கேட்டு குமரி மாவட்ட பாஜக சார்பில் 200 இடங்களில் சத்யாகிரகப் போராட்டம் நடந்தது. பைங்குளம் நகர பாஜக சார்பில் கைசூண்டியில் நடந்த போராட்டத்திற்கு பாஜக தலைவர் சந்தோஷ்குமார் தலைமை வகித்தார்.
போராட்டத்தை முடித்து வைத்து பாஜக மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது,
மத்திய, மாநில அரசுகள் படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியில் பாகுபாட்டை விதைக்கின்றன.
திமுக-காங்கிரஸ் அரசுகள் ஓட்டுக்காக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்துக்களை பழி வாங்கி வருகின்றன. இந்துக்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் போராட்டம் நடத்தினோம். எனினும் அரசு செவி சாய்க்கவில்லை. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது குமரியில் 200 இடங்களில் சத்யாகிரகப் போராட்டம் நடக்கிறது.
சிறுபான்மை மக்கள் தொழில் தொடங்க ரூ. 60 கோடி நிதி அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்துக்கள் தொழில் தொடங்க நிதி இல்லை. மதவேற்றுமையால் நாட்டில் உள்ள 85 சதவிகித மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றார் அவர்.
கட்டாயம் கருத்து தெருவிக்கவும்- அட்மிண்






0 கருத்துரைகள்:
Post a Comment