Share

Tuesday, December 28, 2010

ஐஐடியில் பொறியியல் (B.E/B.Tech) படிக்க IIT-JEE 2011

அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவரகளை B.E/B.Tech சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது. கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை, இலவசமாக வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு, கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது. இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.

தனியார் கல்லூரிகளை விட இங்கு கல்வி கட்டணம் குறைவு, வசதி இல்லாத மாணவர்களுக்கு மத்திய அரசின் இலவச கல்வி உதவி தொகை (ஐஐடி-யில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது. படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.1,00,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள். இவை அனைத்தும் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.

இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்,

இட ஒதுக்கீடு : ஐஐடி-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.

IIT-JEE 2011 : தற்போது ஐஐடி-யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2011 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (IIT-JEE 2011) விண்ணப்பம் விணியோகிகப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் அட்டவணை இடம் பெற்றுள்ளது). மேலும் விபரம் www.jee.iitm.ac.in இந்த இணையதளத்தில் உள்ளது
யார் இந்த தேர்வை எழுத முடியும்?
2010-ல் தேர்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 2011-ல் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். மாணவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே IIT-JEE தேர்வு எழுத முடியும். +2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள், +2 வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள். 3 ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள். +2-வில் குறைந்த்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?
இது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் பாடத்தின் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பாட பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். மேலும் CBSC-யின் +2 ஆம் வகுப்பு புத்தகங்கள் வாங்கிபடித்தால் இது போன்ற தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். குறிப்பாக சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள புத்தக கடைகளில் கிடைக்கும்.

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை. மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ். தேர்வை பற்றி மேலும் விபரம் அறிய மற்றும் உங்கள் சந்தேகங்களுக்கு sithiqu.mtech@gmail.com இந்த மெயிலுக்கு தொடர்புகொள்ளவும்

- S.சித்தீக்.M.Tech

IIT-JEE 2011 தேர்வை பற்றிய விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :



டிசம்பர் – 20 இன்ஷா அல்லாஹ்

(ஆன்லைனில் சமர்பிக்க கடைசி தேதி டிசம்பர் 15)

தேர்வு நடைபெறும் தேதி

ஏப்ரல் – 10

இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை) இன்ஷா அல்லாஹ்

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி

மே – 25 இன்ஷா அல்லாஹ்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Chairmen, JEE, IIT Madras, Chennai - 600036

Phone : 044-22578220

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :

சென்னை ஐ.ஐ.டி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளைகள்

விண்ணப்பத்தின் விலை :

Rs.1,000,

(ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)

ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய

www.jee.iitm.ac.in/online2011



வயது வரம்பு

அக்டோபர் 1, 1986 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்

0 கருத்துரைகள்: