Share

Thursday, June 17, 2010

பர்தா முஸ்லிம் மங்கையரின் மேன்மை!


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...


பர்தா முஸ்லிம் மங்கையரின் மேன்மை!
அன்புச் சகோதரியே! அல்லாஹ் உம் மீது அருள்புரிவானாக! இந்த மடலின் ஒவ்வொரு வாசகமும் உம்முடைய இவ்வுலக வாழ்வையும் மறுவாழ்வையும் கண்ணியப்படுத்தவே எழுதப்படுகிறது. இங்குச் சொல்லப்படுகிற அனைத்தும் அல்லாஹ்வும் அவன் தூதரும் உமக்குக் கட்டளையிட்ட நல்லொழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். இவற்றைப் படித்து உடனடியாகப் பின்பற்று! அல்லாஹ்வின் அன்பிலும் அருளிலும் திளைத்திடு! அல்லாஹ் உமக்கும் எங்களுக்கும் நேர்வழி காட்டுவானாக!
'பர்தா' லி ஒரு விளக்கம்
ஒரு நல்ல முஸ்­ம் பெண்மணி தன் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது மார்க்கம் அவளுக்குக் கட்டளை இட்டுள்ள ஆடை ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அதைத்தான் 'ஹிஜாப், பர்தா' என்று கூறப்படுகிறது. ஒரு பெண் இந்த ஒழுங்கைக் கடைப்பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது; அந்நிய ஆண்களுக்கு முன் நிற்கக் கூடாது. இது அல்லாஹ்வினால் திட்டவட்டமாக (ஹராம்) தடைசெய்யப்பட்டதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீர் கூறும்:''அவர்களும் தங்கள் பார்வைகளைக் கீழ்நோக்கியே வைக்க வேண்டும்; தங்கள் கற்புகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், தங்கள் உடலில் (பெரும்பாலும்) வெüயில் இருக்கக் கூடியவற்றைத் தவிர தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெüயே காட்டாமல் மறைத்துக் கொள்ள வேண்டும். தங்கள் துப்பட்டாக்களை ('புர்கா'க்களை)த் தங்கள் மேலாடைகளின் மீது போட்டு (தலை, முகம், கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க்கொள்ள வேண்டும். பெண்கள் (1) தங்களுடைய கணவர்கள், (2) தங்களுடைய தந்தைகள், (3) தங்களுடைய கணவர்கüன் தந்தைகள் (மாமனார்கள்), (4) தங்களுடைய பிள்ளைகள், (5) தங்களுடைய கணவர்கüன் (மற்ற மனைவிகளுக்குப் பிறந்த) பிள்ளைகள், (6) தங்களுடைய (சொந்த அண்ணன், தம்பிகளாகிய) சகோதரர்கள், (7) தங்களுடைய சகோதரர்கüன் பிள்ளைகள், (8) தங்களுடைய சகோதரிகüன் பிள்ளைகள், (9) (முஸ்லிமாகிய) தங்களுடைய சமுதாயப் பெண்கள், (10) தங்களுடைய அடிமைகள், (11) (பெண்கள் மீது மோகமற்ற) தங்களை அண்டி வாழ்கின்ற ஆண்கள், (12) பெண்கüன் மறைவான அவயங்களை அறிந்துகொள்ளாத சிறுபருவத்தையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர மற்ற எவர் முன்பும் தங்களின் அலங்காரத்தை அறவே வெளிப்படுத்த வேண்டாம். மேலும், (தாங்கள் அணிந்துள்ள கால்கொலுசுகள், வளையல்கள் போன்ற) மறைந்திருக்கக்கூடிய தங்கள் (ஆடை ஆபரண) அலங்காரத்தை அறிவிக்கின்ற நோக்கத்துடன் தங்கள் கால்களை (பூமியில்) தட்டித் தட்டி நடக்க வேண்டாம். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! (இதில் எந்த விசயத்திலேனும் உங்களால் தவறு ஏற்பட்டுவிட்டால்) நீங்கள் வெற்றி பெறும்பொருட்டு அல்லாஹ்வின் பக்கமே பாவ மன்னிப்புக் கோருங்கள்.''' (சூரா அந்நூர் 24:31)
அரைகுறை ஆடை லி ஓர் ஒழுக்கக்கேடு
மாற்றுமத சமுதாயங்களில் இன்று பல பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாகச் சுற்றித் திரிவதைக் காண்கிறோம். இன்னும் பலர், அலங்காரமான ஆடைகளை அணிந்து அந்நியர்களும் பார்த்து ரசிக்கும்படி சுற்றி வருகின்றார்கள். அவர்களில் ஒருத்தியாக முஸ்­ம் பெண்மணி ஒருக்காலும் இருக்கக் கூடாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) கூறினார்கள்: 'இரண்டு கூட்டத்தினர் நரகவாசிகளில் உள்ளவர்கள். அவர்கள் இரண்டு சாராரையும் நான் பார்த்ததில்லை. முதல் கூட்டத்தினர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள். மற்றொரு கூட்டத்தினர்(தாம்) ஆடை அணிந்திருந்தும் நிர்வாணமாகக் காட்சி அளித்த பெண்கள். அவர்கள் பிறரைத் தன் பக்கம் சாய்த்து, தானும் பிறர் பக்கம் சாய்ந்தவர்கள். அவர்களுடைய தலை(யிலுள்ள கூந்தல் அலங்காரம்), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு பயணத் தொலைவி­ருந்தே வீசிக்கொண்டிருக்கும்.'' (ஸஹீஹ் முஸ்­ம் லி 4316)
ஷைத்தானின் வழிகேடு
அந்நியருக்கு அலங்காரங்களைக் காட்டுவது ஷைத்தானின் வழிகேடாகும். ஒரு பெண் தன்னுடைய ஆடை அலங்காரங்களைக் காட்டித் திரிவதால் ஏராளமான தீமைகள் ஏற்படுகின்றன. சமுதாயத்தில் ஒழுக்கச் சீர்குலைவுகள் உண்டாகின்றன. ஷைத்தான் பெண்களைக் கொண்டு பல மானக்கேடான செயல்களைத் தூண்டிவிடுகிறான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சபலங்களை உண்டாக்கி, தகாத உறவுகளையும் குடும்பத்தில் குழப்பங்களையும் ஏற்படுத்துகிறான்.
தன் ஆடை அலங்காரங்களை வெளிப்படுத்திக்கொண்டு செல்கின்ற பெண்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே எதிர்நோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள்.' ' (ஸஹீஹ் முஸ்லிம் லி 2718)
மேலும் கூறினார்கள்:''எனது மரணத்திற்குப் பின் ஆண்களுக்கு மிகவும் தீங்கை ஏற்படுத்தக்கூடிய குழப்பம், பெண்களைவிட வேறொன்றுமில்லை.''' (ஸஹீஹுல் புகாரி லி 5096)
இன்னும் கூறினார்கள்:''இவ்வுலகின் குழப்பத்தை விட்டு உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்; பெண்களின் குழப்பத்தை விட்டும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், இஸ்ரவேலர்களிடையே ஏற்பட்ட முதல் குழப்பம் பெண்களால்தான் ஏற்பட்டது'' (ஸஹீஹ் முஸ்லிம் லி 5292)
இப்படிப்பட்ட பெண்களில் ஒருத்தியாக முஸ்லிம் பெண் இருக்கக் கூடாதென அல்லாஹ் கட்டளையிடுகிறான்:
''நீங்கள் உங்கள் (வீடுகüல் இருந்து வெüச்சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெüயில் சென்று) திரிந்து கொண்டிருந்ததைப்போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை கடைப்பிடியுங்கள்; ஸகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். ''' (சூரா அல்அஹ்ஸாப் 33:33)
அல்லாஹ்வின் கட்டளை
'பர்தா'வை அல்லாஹ்வின் கட்டளைக்காக அணிய வேண்டும். நல்ல முஸ்­ம் பெண்மணி 'பர்தா'வைச் சடங்காகவோ, சம்பிரதாயமாகவோ கடைப்பிடிக்கக் கூடாது. தன்னுடைய முன்னோர்களின் கலாசார ஆடை என்றும் நினைக்கமாட்டாள். மாறாக, 'பர்தா' அணிகின்ற சட்டத்தை அல்லாஹ்வின் கட்டளை என்ற நம்பிக்கையுடனும் மனப்பூர்வமான விருப்பத்துடனுமே பேண வேண்டும். குழப்பங்கள் நிறைந்த இடங்களை விட்டும், இழிவான சூழ்நிலைகளை விட்டும், வழிகேட்டின் அபாயங்களை விட்டும் தன்னைப் பாதுகாக்கவே தனக்கு அல்லாஹ் இப்படிப்பட்ட கட்டளையை விதித்துள்ளான் என்றும், தன்னுடைய தனித்தன்மையை இதன் மூலம் பிரித்துக் காட்டுகிறான் என்றும் முழுதிருப்தியுடன் முஸ்லிம் பெண் ஏற்று நடக்க வேண்டும்.
அல்லாஹ் இச்சட்டத்தை இறக்கியபோது முஹாஜிர்* மற்றும் அன்ஸாரிப் பெண்கள்** அப்படித்தான் ஏற்றுக்கொண்டார்கள்.
அன்னை ஆயிô (ரழி) அறிவிக்கிறார்கள்: முந்தி வாழ்ந்த முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை காட்டட்டும். ''தங்கள் துப்பட்டாக்களை ('புர்கா'க்களை)த் தங்கள் மேலாடைகளின் மீது போட்டு (தலை, முகம், கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க்கொள்ள வேண்டும்' என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கியபோது தங்களின் போர்வைகளைக் கிழித்து தங்க(ள் முகங்க)ளை மூடிக்கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி லி 4758)
ஸஃபிய்யா பின்த் û'ஷபா (ரஹ்) அறிவிக்கிறார்கள்: .....சூரா நூர் இறக்கப்பட்டது. அதில் ''தங்கள் துப்பட்டாக்களை ('புர்கா'க்களை)த் தங்கள் மேலாடைகளின் மீது போட்டு (தலை, முகம், கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க்கொள்ள வேண்டும்' என்ற வசனம் இறக்கப்பட்டது. அன்ஸாரி ஆண்கள் தங்களின் பெண்களுக்கு அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். ஒவ்வோர் ஆணும் தன்னுடைய மனைவி, மகள், சகோதரி, உறவுப் பெண்கள் என அனைவரிடமும் சென்று அதை ஓதிக்காட்டினார். உடனடியாக அனைத்துப் பெண்களும் தங்கள் போர்வைகளை எடுத்துப் போர்த்திக்கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)
அல்லாஹ் அந்த முஹாஜிர் மற்றும் அன்ஸாரிப் பெண்கள் மீது கருணை காட்டுவானாக! அல்லாஹ்வின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை எவ்வளவு உறுதியானது!, உண்மையானது! அல்லாஹ்வின் சட்டம் இறக்கப்பட்டபோது அதை எவ்வளவு அழகுடன் ஏற்றுக்கொண்டார்கள்! உண்மையான நம்பிக்கையுடன் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நம்பிக்கை கொள்கின்ற ஒவ்வொரு முஸ்­ம் பெண்ணும் சிறப்பிற்குரிய அந்தப் பெண்களையே பின்பற்றுவாள்.
இன்றும் அன்ஸாரிப் பெண்களைப் போன்று 'பர்தா'வைப் பேணுகின்ற முஸ்லிம் பெண்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். (அல்ஹம்து­ல்லாஹ்!) இப்படிப்பட்ட தூய்மையான முஸ்­ம் பெண்களைக் கொண்டுதான் இஸ்லாமிய வீடுகள் ஒளிமயமாகின்றன. இஸ்லாமியச் செயல் வீரர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
தீய பிரசாரம்
முஸ்லிம் அல்லாதவர்களின் தீய பிரசாரத்தில் ஏமாறமாட்டாள் முஸ்லிம் பெண்மணி.. பெண்கள் இவர்களின் தீய பிரசாரத்தில் ஏமாந்து தங்களின் இஸ்லாமியத் தனித்தன்மையைத் தொலைத்துவிடக் கூடாது. முஸ்லிம் பெண்கள் இஸ்லாமியப் 'பர்தா'வைக் களைந்துவிட்டு ஆண்களுடன் தங்கு தடையின்றி பழக வேண்டுமென பலர் ஊளையிடுகின்றார்கள். தங்களின் பெண்கள் கற்பையும் மானத்தையும் பெண்மையையும் இழந்ததுபோன்று முஸ்லிம் பெண்களும் இழக்க வேண்டுமென விரும்புகின்றார்கள்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், தங்களை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்கின்ற படித்த மேல்தட்டு (?) மக்களில் பலரும் பர்தாவை விமர்சிக்கின்றார்கள். ஆனால், அவர்களில் சிலர் இதன் விபரீதத்தை உணர்ந்தபோது மனம் திருந்தியுள்ளார்கள்.
இதோ..! டாக்டர். நவால் ஸஅதாவி என்ற அரபிய முஸ்லிம் பெண் 'பர்தா'வையும் 'பர்தா' அணிந்த பெண்களையும் பல காலமாகக் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், இன்று அவர் மனம் திருந்தி, மேற்கத்திய பெண்களின் கேவலமான தன்மையையும் அரை நிர்வாணத்தையும் எதிர்த்து வருகிறார்.
அவர் கூறுவதைக் கேளுங்கள்: ''நான் இலண்டன் நகர வீதிகளில் பார்த்த காட்சி அது. பெண்களில் பலர் தங்களின் உடல்களை விலை பொருட்களைப்போல விலை பேசிக் கொண்டிருந்தார்கள். நிர்வாணிகளைப் போன்றே அவர்கள் இருந்தார்கள்.. தான் ஒரு வியாபாரப் பொருள் அல்ல, தான் ஒரு மானமுள்ள மனிதன் என்று தன்னைக் கருதக்கூடிய எந்தப் பெண்ணும் தனக்கு நிர்வாணத்தையோ அல்லது அரை நிர்வாணத்தையோ ஒருபோதும் விரும்பமாட்டாள்.''' (அல்முஜ்தமஃ மலர் எண்: 931)
'பர்தா' அறிவை விட்டுத்தான் களையப்பட வேண்டுமே தவிர உடலை விட்டு அல்ல. 'பர்தா' அணிந்த எத்தனையோ பெண்கள் 'பர்தா' அணியாத மேற்கத்திய கல்வி படித்த பல பெண்களைவிட நல்ல தெளிவான, தீர்க்கமான அறிவைப் பெற்றிருக்கிறார்கள். மேற்கத்தியக் கலாசாரத்தைப் பின்பற்றுகின்ற பெண்களின் முகம், தலை, உடல் திறந்துள்ளன; ஆனால் அறிவும், சிந்தனையும் திரையிடப்பட்டுள்ளன.
'பர்தா'வின் இன்றைய நிலைமை
இன்று 'பர்தா' அணிகின்ற பெண்களில் பலருக்கு அது பற்றிய சட்டங்கள் தெரியாததால் தாங்கள் விரும்பிய மாதிரியெல்லாம் 'பர்தா'க்களை அணிகிறார்கள். அதிகமானவர்கள் தங்கள் 'பர்தா'க்களில் அலங்காரமான (ஊம்க்ஷழ்ர்ண்க்ங்ழ்ஹ்) பூ வேலைப்பாடுகளைச் செய்துகொள்கிறார்கள். அவை பார்ப்பவர்களின் கண்களைக் கவர்கின்றன. இன்னும் பலர், 'பர்தா'வின் ஓரங்களைக் கிழித்து, அவற்றை நாடாக்களால் முடிச்சிட்டு, உள்ளே அணிந்துள்ள ஆடைகள் வெளியே தெரியும்படி அணிகிறார்கள். இத்தகையவர்கள் தாங்கள் 'பர்தா'வே அணியவில்லை என்பதை அறிய வேண்டும்.
இன்னும் பலர், ஸ்கார்ஃப் ஒன்றைத் தலையில் கட்டிக்கொண்டு தங்களின் பொதுவான சேலைகள் மற்றும் சுடிதார் ஆடைகளுடனேயே வெளியே வருகிறார்கள். இவர்களும் 'பர்தா' அணிந்தவர்களாக மாட்டார்கள். சிலர் வீட்டிலிருந்து புறப்படும்போது 'பர்தா' அணிகிறார்கள். பிறகு வழியில் தலை முக்காடு கழன்றுவிடுகிறது. திறந்த தலையுடன் கழுத்துப்பகுதியும் நெஞ்சுப்பகுதியும் திறந்த நிலையில் செல்கிறார்கள். பலர் நெக்லஸ், வளையல்கள் போன்ற நகைகளை வாங்குவதற்காகக் கடைகளுக்குச் செல்லும்போது அங்குள்ள கடை ஊழியர்களிடம் மிகவும் சகஜமாகப் பேசிக்கொண்டு, அவர்கள் முன் 'பர்தா'வை விலக்கிவிட்டு நகைகளை அணிந்து பார்க்கிறார்கள். கடையிலுள்ள ஆண்கள் அந்நியர்கள்தாம் என்ற நினைப்பே இல்லாதபடி சொந்தச் சகோதரர்களிடம் சிரித்துப் பேசி விளையாடுவதைப்போல நடந்துகொள்கிறார்கள். கடை ஊழியனிடம் தங்கள் கைகளைக் கொடுத்து வளையல்கள் அணிந்துகொள்கிறார்கள்; அவனிடம் தங்கள் கழுத்தைக் காட்டி நெக்லஸ்களை அணிந்துவிடச் சொல்கிறார்கள்; கால்களைத் திறந்து காட்டி கொலுசை மாட்டிவிடச் சொல்கிறார்கள். மானங்கெட்ட இந்தச் செயலைப் பற்றி எந்த அருவருப்பும் கொள்வதில்லை. நகைக்கடைகள் என்றில்லாமல் மளிகைக்கடைகள், பால்கடைகள், இறைச்சிக்கடைகள் போன்ற இடங்களிலும் அங்குள்ள ஊழியர்களிடம் குழைந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
கிராமங்களில் உள்ள பெண்கள் தங்கள் ஊரிலுள்ள கடைக்காரர்களிடமும், நகரத்துப் பெண்கள் தங்கள் தெருக்களிலுள்ள கடைக்காரர்களிடமும் அன்றாடம் சென்று தேவைப்படுகின்ற பொருட்களை வாங்கி வருகின்ற பழக்கம் உடையவர்களாக இருக்கின்றார்கள். இச்சமயங்களில் அப்பெண்கள் அந்தக் கடைக்காரர்களை ஆண்களாகக் கூட நினைப்பதில்லை. அந்த அளவு அவர்களுடன் நெருங்கிப் பழகுகிறார்கள். பலர் அவர்களிடம் 'பர்தா'வைப் பேணுவதை அவசியமாகக் கருதுவதே இல்லை.
அதிலும், வசதிமிக்க வீட்டாரின் பெண்கள் தங்கள் கார் டிரைவர்களை தங்களின் சொந்தச் சகோதரர்களைப் போல் பாவித்து அவர்களுடன் 'ஷாப்பிங் போகிறார்கள்; அவர்களிடம் சிரித்துப் பேசி விளையாடுகிறார்கள்; காரில் அவர்களுக்கு அருகிலேயே உட்கார்ந்து செல்கிறார்கள்; கணவனை மதிப்பதைப்போல் அவர்களை மதிக்கிறார்கள்; சகோதரனிடம் பழகுவதைப்போல் அவர்களிடம் பழகுகிறார்கள். இது இறுதியில் தகாத எண்ணங்களையும் மானக்கேடான செயல்களையும் தூண்டிவிடுகிறது. நல்ல குடும்பங்களையும் சீர்குலைத்துவிடுகிறது.
இன்னும் சில இடங்களில் சிறுமிகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துச் சென்று விடுவதற்கும் அழைத்து வருவதற்கும் வாலிபர்களை வேலைக்கு வைக்கிறார்கள். அச்சிறுமிகளோ தாங்கள் வயது வந்த பிறகும் அந்தப் பணியாட்களுடன் முன்னர் பழகியதைப் போன்றே பழகுகிறார்கள். நாளடைவில் பல விரும்பத் தகாத சம்பவங்களை இது ஏற்படுத்திவிடுகிறது.
இந்த விபரீதங்களுக்கு அடிப்படைக் காரணம், முறையான 'பர்தா'வைப் பற்றிய தெளிவான அறிவையும், அது சார்ந்த ஒழுக்கங்களையும் அறியாமல் இருப்பதே ஆகும். அந்த நிபந்தனைகளாவன:
முறையான 'பர்தா'வுக்குரிய நிபந்தனைகள்
1. முகம் உட்பட முழு உடலையும் மறைக்க வேண்டும்.
தலை முதல் கால்கள் வரையுள்ள எல்லா உடல் உறுப்புகளையும் முழுமையாக மறைக்க வேண்டும். இன்று பலர் தங்கள் முகம், கூந்தல், கழுத்துப் பகுதி, கணுக்கால் பகுதி, அணிந்துள்ள ஆடை மற்றும் அதன் நிறங்கள் ஆகியன வெளியே தெரியும்படி 'பர்தா' அணிகிறார்கள். இது தவறாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: ''தங்கள் துப்பட்டாக்களை ('புர்கா'க்களை)த் தங்கள் மேலாடைகளின் மீது போட்டு (தலை, முகம், கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க்கொள்ள வேண்டும்.''' (சூரா அந்நூர் 24:31)
ஒரு பெண் தன் உடலின் எல்லாப் பகுதிகளையும் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதைப் பற்றி நபி (ஸல்) இப்படிக் கூறினார்கள்: ''பெண்ணே 'அவ்றத்' (மறைத்து பேணப்பட வேண்டியவள்) ஆவாள். ''' (ஜாமிவுத் திர்மிதி லி 1169)
2. 'பர்தா' அலங்காரமின்றி இருக்க வேண்டும்.
'பெண்கள் தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெüயே காட்டாமல் மறைத்துக் கொள்ள வேண்டும்.'' (சூரா அந்நூர் 24:31)
3. 'பர்தா' மெல்லியதாக இல்லாமல் தடிமனாக இருக்க வேண்டும்.
4. 'பர்தா' இறுக்கமாக இல்லாமல் பெரிதாகவும் தாராளமாகவும் இருக்க வேண்டும்.
'பர்தா' அணிவதின் அடிப்படை நோக்கமே, உடலின் அவயங்களையும் ஆடை அலங்காரங்களையும் முழுமையாக மறைத்து, அவற்றின் சுவடு கூட வெளியில் தெரியாமல் இருப்பதே! மெல்லிய துணிகளால் ஆன 'பர்தா'க்களை அணிகின்றபோதும், இறுக்கமான 'பர்தா'வை அணிகின்றபோதும் இந்த நோக்கம் சிதைந்துவிடுகிறது. அப்படிப்பட்ட 'பர்தா'க்களை அணிந்த பெண்களுக்குக் கடுமையான வேதனை உண்டென நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள்:
''என் சமுதாயத்தின் பிந்திய காலத்தில் வருகின்ற பெண்கள் ஆடை அணிந்தும் (உண்மையில்) நிர்வாணமாக இருப்பார்கள். நிச்சயமாக அவர்கள் சபிக்கப்பட வேண்டியவர்களே!' '' (அல்முஃஜம் அஸ்ஸகீர்)
5. 'பர்தா'வில் நறுமணம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும்.
நறுமணம் பூசிக்கொண்டும், கூந்தலில் பூக்களைச் சூடிக்கொண்டும் வெளியே செல்கிற பெண்களை நபி (ஸல்) இப்படிக் கண்டித்தார்கள்: ''எந்தப் பெண் நறுமணம் பூசிய நிலையில் அதை மக்கள் நுகர்கிறபடி அவர்களுக்கு மத்தியில் நடந்து செல்கிறாளோ அவள் விபசாரியாவாள்.''' (முஸ்னது அஹ்மது லி 19338)
6. 'பர்தா' ஆண்களின் ஆடையை ஒத்திருக்கக் கூடாது
''பெண்களைப் போன்று ஆடை அணிகின்ற ஆண்களையும், ஆண்களைப் போன்று ஆடை அணிகின்ற பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள்.'' (சுனன் அபூதாவூது லி 4098)
7. 'பர்தா' முஸ்லிம் அல்லாத பெண்களின் ஆடைகளை ஒத்திருக்கக் கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவர்களைச் சேர்ந்தவரே!''(முஸ்னது அஹ்மது லி 5107)
8. 'பர்தா'வைப் புகழுக்காக அணியக் கூடாது
நபி (ஸல்) எச்சரித்தார்கள்: ''யார் உலக ஆசையை ஏற்படுத்தக்கூடிய ஆடையை அணிகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் இழிவான ஆடையை அணிவிப்பான். பின்னர் அவர் நரக நெருப்பில் வீசப்படுவார்.'' (சுனன் அபூதாவூது லி 4028)
இந்த எட்டு நிபந்தனைகளும் நிறைவேறுகிற விதத்தில் 'பர்தா' அணிந்தவர்களே அல்லாஹ்விடம் உண்மையில் 'பர்தா' அணிந்த நல்ல முஸ்லிம் பெண்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
'பர்தா' அலட்சியம் செய்யப்படுகிற இடங்கள்
தவறாமல் 'பர்தா' அணிந்து வருகின்ற பெண்களிலேயே பலர், தாங்கள் அதை அணிந்த பிறகும் பல தவறுகளைச் செய்கிறார்கள். அதைச் சரி செய்வதில்லை. இன்னும் பலர்,
1. திருமண விருந்துகளிலும் உறவினர்களைச் சந்திக்கச் செல்கிற இடங்களிலும்.
2. கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற இடங்களிலும், சுற்றுலாத் தலங்களில் வேடிக்கை பார்க்கின்ற போதும்,
3. குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்கிற போதும், அழைத்து வருகிற போதும்,
4. தங்கள் வாகனங்களை ஓட்டிச் செல்கிற போதும், அவற்றின் பின்புறம் உட்கார்ந்து செல்கிற போதும்,
5. ஆட்டோ மற்றும் கார்களில் பயணிக்கிற போதும், அன்றாடம் பயணிக்கிற பேருந்துகளில் செல்கிற போதும்
6. கணவரின் தம்பி, அண்ணன், பெரிய தந்தை, சிறிய தந்தை மற்றும் அவர்களின் நண்பர்கள் ஆகியோருக்கு முன்னிலையிலும்
7. பள்ளிக்கூடங்களில் ஆசிரியையாகவோ, தலைமை ஆசிரியையாகவோ, முதல்வராகவோ பதவி வகிக்கின்ற போதும், பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களாகச் செல்கிற போதும்,
8. மருத்துவராகவோ, வியாபார நிறுவனங்களின் நடத்துனராகவோ, கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவராகவோ இருக்கின்ற போதும்,
9. அரசியல் மேடைகளிலும், கவியரங்குகளிலும், விளையாட்டு அரங்குகளிலும்,
10. தெருக்களில் தண்ணீர் பிடிப்பதற்காக நிற்கின்ற போதும், வீட்டின் பால்கணிகளில் நிற்கின்ற போதும், உணவகங்களில் உணவு சாப்பிடுகிற போதும், ரேசன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்காக நிற்கிற போதும்,
11. அண்டை வீடுகளில் எதையேனும் கொடுக்கவோ வாங்கவோ போகின்ற போதும், அந்த வீடுகளில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிற போதும், பல காலமாகப் பழகிய அண்டை வீடுகளில் அங்குள்ள ஆண் குழந்தைகள் வாலிப வயதை அடைந்த பிறகும்,
இப்படிப் பல நேரங்களிலும் இடங்களிலும் தங்கள் 'பர்தா'வை மறந்தபடி இருக்கிறார்கள். 'பர்தா' அணிந்திருந்த போதிலும், அங்க அவயங்கள் வெளிப்படும்படி கவனக்குறைவாக இருந்துவிடுகிறார்கள்.
அந்நியர்களிடம் பழகுவதையும், தனித்து இருப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் 'எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் அவளின் மஹ்ரமான உறவினர் இல்லாத நிலையில் தனிமையில் சந்திக்க வேண்டாம். பெண் தன்னுடைய மஹ்ரமான உறவினர் இல்லாத நிலையில் பயணம் செய்ய வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து ''அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ்ஜு செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்னின்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில்) நான் என்ன செய்வது'' என்று கேட்டார். நபி (ஸல்), ''(போருக்குச் செல்வதிலிருந்து பெயரைத்) திரும்பப் பெற்றுக்கொண்டு, நீர் உம்முடைய மனைவியுடன் ஹஜ்ஜு செய்வீராக!'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரீ லி 3006)
'மஹ்ரம்' என்றால் நிரந்தரமாகத் திருமணம் செய்துகொள்வது தடைசெய்யப்பட்ட உறவினராவார். உ.ம்: தந்தை, சகோதரர், தந்தையின் சகோதரர், தாயின் சகோதரர், மகன், மகனின் மகன் போன்று.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அந்நியப் பெண்களைச் சந்திப்பது குறித்து நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்.'' அப்போது ஓர் அன்ஸாரித் தோழர் எழுந்து, ''அல்லாஹ்வின் தூதரே! கணவனின் உறவினர்கள் (சகோதரர்கள்) குறித்து என்ன சொல்கிறீர்கள்? ''' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), ''கணவனின் உறவினர்கள், மரணம்''' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரீ லி 5232)
கணவரின் சகோதரர் மற்றும் கணவரின் உறவினர்களை மரணம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிட்டதன் காரணம், இவர்கள் வீட்டிற்குள் சென்று வருதல் எளிது என்பதால் இவர்கள் மூலம் தீமைகள் நடப்பது அதிகம். ஆகவேதான், அவர்கள் தனிமையில் வருவதைக் கடுமையாக எச்சரிக்கும் விதமாக மரணம் என்று வருணிக்கப்பட்டது. அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!
அன்புச் சகோதரியே! அல்லாஹ்வின் அன்பையும் மன்னிப்பையும் வேண்டி நிற்கின்ற உமக்கு இதுதான் நேரான வழி! இது வரை உனக்குச் சொல்லப்பட்ட அறிவுரைகள் அனைத்தும் உன்னை இவ்வுலகிலும் மறுமையிலும் மேன்மையாக்கி வைக்கும். எனவே, இவற்றை நீ உடனடியாக நடைமுறைப்படுத்து! அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்! அல்லாஹ் கீழ்வருமாறு கூறிக் காட்டுகிறான்:
'(எங்கள் இறைவனே! உன் வசனங்களை) நாங்கள் கேள்விப்பட்டோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் கட்டுப்பட்டோம். எங்கள் இறைவனே! நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகின்றோம். உன்னிடம்தான் (நாங்கள்) சேர வேண்டியதிருக்கின்றது'' என்றும் கூறுகிறார்கள். (சூரா அல்பகறா 2:285)
அடிக்குறிப்புகள்:
*.முஹாஜிர் லி இஸ்லாமுக்காக மக்காவைத் துறந்து மதீனா வந்தவர். **. அன்ஸாரி லி மக்காவைத் துறந்து வந்தவர்களை ஆதரித்து உதவி செய்த மதீனாவாசி.
தொகுத்தோர்: 1) உமர் இப்னு அப்துஸ் சலாம், 2) அலீ இப்னு அப்துல்லாஹ்
3) இப்ன் அப்துல் வஹாப்

0 கருத்துரைகள்: