Share

Sunday, January 31, 2016

மின்வாரியத்தில் உதவி பொறியாளர் காலி பணியிடம்

Image result for தமிழக மின்வாரியத்தில்சென்னை : தமிழக மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாத இறுதியில், காலியாக உள்ள 375 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. அதில் 2015 டிசம்பர் 28ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கான கடைசி தேதி வரும் 11ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மாதம் 31ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வும் நடத்தப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயக்குனர்கள் தலைமையில் நடக்கும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தும் தேர்வுகளுக்கு 85 சதவீதமும், நேர்முகத் தேர்வுக்கு 15 சதவீதமும் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது. 

இந்த 15 சதவீத மதிப்பெண் அதிகாரிகள் வசம் உள்ளதால், ஊழல் நடக்க அதிக வாய்ப்புள்ளது எனவும், விண்ணப்பதாரர்களிடம் பணம் வாங்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்றும் அனைத்து தரப்பினரும் புகார் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது முதலே இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், சுமார் ரூ.3 முதல் 6 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாகவும் விண்ணப்பதாரர்கள் பகிரங்கமாகவே புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்பத்துக்கும் தற்போது மூடுவிழா கண்டுள்ளதாக பரபரப்பு புகார் எழந்துள்ளது. இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் கூறியதாவது: மின்வாரியத்தில் காலியாக உள்ள 375 உதவி பொறியாளர் பணியிடத்துக்கு 2015 டிசம்பர் 28ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஜனவரி 11ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டது. 

ஆனால் டிசம்பர் 31ம் தேதி முதலே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியவில்லை. www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் recruitment என்ற பக்கம் வரை மட்டுமே செல்ல முடிகிறது. அதற்கு மேல் அந்த இணையதளத்தை பார்வையிட முடியவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், “வரும் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மீண்டும் ஒருமுறை சரியாக பாருங்கள்” என அலட்சியமாக பதில் கூறுகின்றனர். முன் கூட்டியே பணம் வாங்கிக் கொண்டு, அவர்களை மட்டும் திட்டமிட்டு ஆன் லைன் மூலம் முதல் நாளே விண்ணப்பம் செய்து விட்டு, அடுத்த நாள் முதல் யாரும் விண்ணப்பம் செய்யவிடாமல் தடுக்கும் செயலாக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம் என அதிருப்தி தெரிவித்துள்ளனர். காலி பணியிடங்களுக்கான ஆன் லைன் விண்ணப்பம் அறிவித்து விட்டு ஓரே நாளில் அதற்கு மூடுவிழா கண்டுள்ளது ஏராளமான பட்டதாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.