Share

Wednesday, April 8, 2015

அண்ணாபல்கலையில் பேராசிரியர் பணி வாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த  பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இதற்கு மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மண்டல அலுவலகங்களும், அரியலூர், ஆரணி, திண்டுக்கல், காஞ்சிபுரம், நாகர்கோவில், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், திருக்குவளை, தூத்துக்குடி, திண்டிவனம், திருச்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகளும் உள்ளன.

இந்தக் கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் காலியாக இருக்கும் 178 இணைப் பேராசிரியர் பணியிடங்களையும் 102 பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தகுதி:

இணைப் பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருக்க வேண்டியதோடு, 5 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருப்பதோடு, 13 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

அண்ணாபல்கலைக் கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி வடிவ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் பொதுப் பிரிவினர் 1,000 ரூபாய்க்கும் எஸ்.டி., எஸ்.சி., பிரிவினர் 400 ரூபாய்க்கும் டி.டி. எடுத்து, தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து The Registrar, Anna University, Chennai25 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Department wise Professor
Vacancies in Anna University:

Civil Engineering : 14, Mechanical Engineering : 21, Electronics - Communication Engineering : 21, Electrical - Electronics Engineering : 14, Computer Science Engineering / Information Technology:20, Automobile Engineering : 01, Aeronautical Engineering : 01,Instrumentation Engineering : 01, Nano Science - Technology : 02, Management Studies:03, Computer Applications:04

Department wise Associate Professor
Vacancies in Anna University:

Civil Engineering : 36, Mechanical Engineering : 38, Electronics - Communication Engineering : 19, Electronics - Communication Engineering : 14,  Computer Science Engineering / Information Technology:25, Automobile Engineering : 01,  Aeronautical Engineering : 01, Instrumentation Engineering : 01, Nano Science - Technology : 02,  Petrochemical Technology:01, Mathematics:11,  Physics:11, Chemistry:13, Computer Application:05

மேலும் விரிவான விவரங்களை அறிய www.annauniv.edu என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

0 கருத்துரைகள்: