Share

Tuesday, December 16, 2014

சித்த மருத்துவ பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளின் மூன்றாண்டு பட்டயப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.
செவிலிய சிகிச்சை (நர்சிங் தெரபி), ஒருங்கிணைந்த மருந்தகம் (இன்டெகிரேட்டட் பார்மஸி)ஆகிய இரண்டு பிடிப்புகளுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் இந்த பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இரண்டு கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 200 இடங்கள் உள்ளன.
பிளஸ் டூ தேர்வில் கணிதம், அறிவியல் பாடம் எடுத்துப் பயின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தேர்வுக்குழு (டிப்ளமோ படிப்புகள்), இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவ வளாகம், அரும்பாக்கம், சென்னை-106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 24-ஆம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்த தேதிகள் உள்ளிட்ட விவரங்கள் தமிழக அரசின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

0 கருத்துரைகள்: