Share

Thursday, April 3, 2008

கேரள முஸ்லிம் பல்கலைக்கழகத்துடன் அல்அஸ்ஹர்பல்கலைக்கழகம்
உடன்பாடு

அரபிக் கடலோரம் மலைகள் சூழ்ந்த இயற்கைஎழில் கொஞ்சும் கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில்புகழ்பெற்று விளங்கும் முஸ்லிம் பல்கலைக்கழகம்ஜாமியா மர்கஸ். இது இந்திய அளவில் புகழ்பெற்றுவருகிறது.உலகின் பழம்பெருமை வாய்ந்த அல் அஸ்ஹர்பல்கலைக்கழகம், எகிப்து தலைநகர் கெய்ரோவில்உள்ளது. கோழிக்கோடு முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்குஉட்பட்ட கல்லூரி மாணவர்கள் எகிப்தில் புகழ்பெற்றஅஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இங்கிருந்து கொண்டேமேற்படிப்பு படிக்கலாம். கோழிக்கோடு முஸ்லிம்பல்கலைக்கழகத்தின் பட்டங்களைப் பெற முடியும் எனகோழிக்கோடு முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னணிஅறிஞர் அபூபக்கர் முஸலியார் தெரிவிக்கிறார். 10ஆண்டுகளுக்கு முன்பே அல் அஸ்ஹர்பல்கலைக்கழகத்துடன் கல்வித் தொடர்பு வைத்ததாகவும்தற்போது தங்கள் கல்வி நிலையத்திற்கு அங்கீகாரம்வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.கோழிக்கோடு முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயிலும்,அரபு மொழி படிப்புகள் மற்றும் இஸ்லாமிய நெறிசார்ந்தபடிப்புகளுக்கு இதன்படி சர்வதேச அந்தஸ்துகிடைத்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.