Share

Monday, February 13, 2012

தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'

First Published : 11 Feb 2012 04:02:01 AM IST
Last Updated : 11 Feb 2012 04:12:38 AM IST

வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம். 39 வயதான உமா மகேஸ்வரி, ஆசிரியர் பணியை மக்கள் சேவையாகக் கருதி, தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறியும்போது, கொலையுண்டிருப்பது ஓர் ஆசிரியையா அல்லது தமிழகத்தின் வருங்காலமா என்று நெஞ்சம் துணுக்குறுகிறது.
அதே சென்னையில் இன்னொரு சம்பவம். அனகாபுத்தூரில் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை, அவரிடம் நண்பர்களாகப் பழகிய நான்கு இளைஞர்கள் வஞ்சகமாக அழைத்துச் சென்று, அவருக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து வெறித்தனமாகக் கற்பழித்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் மாணவர்கள். அதிலும் பொறியியல் படிக்கும் மாணவர்கள்.
இளம் தலைமுறையினர் மத்தியில் காணப்படும் பொறுமையின்மைக்கும், வெறித்தனமான பிடிவாதங்களுக்கும், கட்டுப்பாடில்லாத ஒழுக்கக் கேடுகளுக்கும் அடிப்படைக் காரணங்கள் இறையுணர்வு இல்லாமையும், நுகர்வுக் கலாசாரத்தின் தாக்கமும்தான் என்பது நமது தேர்ந்த கருத்து. அதிலும் குறிப்பாக, நுகர்வுக் கலாசாரம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒழுக்கக் கேடுகளில் முக்கியப் பங்கு வகிப்பது வக்கிரத்தனங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் காட்சி ஊடகங்களும், வெறித்தனத்துக்கு வழிகோலும் மதுப் பழக்கமும்தான் இந்தப் போக்குக்குக் காரணங்கள்.
இறையுணர்வாளர்கள் தவறிழைக்கவில்லையா? இறைவனின் பெயரால் இழைக்கப்பட்ட கொடுமைகள் கொஞ்சமா நஞ்சமா? ஆஷாடபூதிகளாகவும், ருத்திராட்சப் பூனைகளாகவும், கபட வேட தாரிகளாகவும் எத்தனையோ பேர் காவி உடை தரித்த, வெள்ளை அங்கியை அணிந்த காமுகர்களாக உலவினார்கள் தெரியுமா? என்றெல்லாம் இறை மறுப்பாளர்கள் எதிர்க்கேள்வி எழுப்பக்கூடும். அவர்கள் கூறுவது எல்லாம் பொய் என்று நாம் மறுக்கவோ, ஒதுக்கித் தள்ளவோ தயாராக இல்லை.
அதேசமயம், இறையுணர்வு என்பது பரவலாக, சமுதாயத்தில் ஒழுக்கத்தையும் நேர்மையையும் தவறு செய்தால் இறைவன் தண்டிப்பார் என்கிற தார்மிக பய உணர்வையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது. கபடவேட தாரிகள் சாமியார்களாகவும், பாதிரியார்களாகவும், மௌல்விகளாகவும் உலவி இருக்கலாம். ஆனால், அப்படி நடந்துகொண்ட ஒரு சிலரைக் காரணம் காட்டி சமுதாயத்தில் ஒழுக்கத்தைப் போதித்த தெய்வத் தொண்டர்கள் அனைவரையும் நாம் இழிவு செய்துவிட முடியாது. கூடாது!
இளைஞர்களுக்கு ஆன்மிக போதனை நடத்தி வந்த காலகட்டத்தில், பேராசைக்கு இடம் கொடுக்காதே, ஒழுக்கம்தான் உயர்வு தரும், இறை நம்பிக்கை உன்னைக் காப்பாற்றும் என்று பிஞ்சு உள்ளங்களில் நல்ல போதனைகளைப் பள்ளிகளிலும் வீட்டிலும் ஊட்டி வளர்த்துவந்த காலங்களில் எங்கோ ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்ததுபோக, இப்போது இளைஞர்கள் பாதை தவறி நடப்பது என்பதே ஒரு நெறியாக மாறி விட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
கடவுள் என்று ஒருவர் இல்லையென்றால், அப்படி ஒருவரை நாம் கண்டுபிடித்து நிலைநிறுத்தியாக வேண்டும் என்பார் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர் வால்டேர். பள்ளிகளில் இறையுணர்வு போதிக்கப்பட்டது. ஆத்திச்சூடியும், கொன்றை வேந்தனும், உலக நீதியும், மூதுரையும் பிஞ்சு உள்ளங்களை நெறிப்படுத்த சொல்லிக் கொடுக்கப்பட்டன. இப்போதைய நர்சரி ரைம்ஸ் கல்வி முறை, பணத்தைத் தேடுவதும் வாழ்க்கை வசதிகளைத் தேடுவதும், சிற்றின்ப சந்தோஷங்களுக்கு வழிகோலுவதும் மட்டுமே தனது குறிக்கோள் என்று மாறிவிட்டிருப்பதன் வெளிப்பாடுதான் சென்னையில் நடந்தேறியிருக்கும் அந்த இருவேறு சம்பவங்கள்.
கற்பழிக்கப்பட்ட பெண், தனது நண்பர்கள் என்று அந்த நான்கு மாணவர்களையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து தாய்க்கு அறிமுகப்படுத்தியபோது, சகோதரிபோலத் தனது மகளுடன் பழகுகிறார்கள் என்று அந்தத் தாய் கருதி அதை அங்கீகரித்ததன் விளைவுதான் இன்று கற்பழிப்பில் முடிந்திருக்கிறது என்று நாம் சொன்னால் நம்மைப் பழமைவாதிகள் என்று ஒதுக்கக்கூடும். ஆனால், அதுதானே நிஜம்?
ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதுபோலத் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும், கதைகளும் பரவலாக வெளிவருகின்றன. அவை நடைமுறையில் சாத்தியம்தானா என்பதை நினைத்துப் பார்க்கக்கூட திராணியற்றவர்களாக நாம் மாறிவிட்டிருக்கிறோம். காரணம் இதைத் தவிர்க்க முடியாது என்கிற சூழ்நிலையை இன்றைய நுகர்வுக் கலாசாரச் சூழல் உருவாக்கி விட்டிருக்கிறது.
திரைப்படங்கள் சமுதாய சீர்திருத்தங்களுக்கு வித்திட்டதுபோய் சமுதாயச் சீரழிவுக்கு வழிகோலிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் காதலைத் தவிர, வேறு உணர்வுகளே இல்லை என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தாத திரைப்படங்கள் ஒன்றிரண்டு மட்டுமே என்றாகிவிட்டது.
பள்ளி மாணவர்கள் தொடங்கி பிறந்த நாளானாலும், தேர்வில் வெற்றி பெற்றாலும், மகிழ்ச்சியான தருணம் என்றாலும் மது அருந்திக் கொண்டாடுவது என்பது கலாசாரமாகிவிட்டிருக்கிறது. போதாக்குறைக்கு, நமது அரசும் ஊருக்கு ஒன்றிரண்டு என்பதுபோய் தெருவுக்குத் தெரு மதுபான விற்பனைக் கடைகளைத் திறந்து வைத்து இளைஞர்களைத் தவறான வழிக்குத் திசைதிருப்புவதில் முனைப்பாக இருக்கிறது.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாகக் கருதுகிறார்களே தவிர, குறைந்த வருமானமானாலும் ஒழுக்கமான நிறைந்த வாழ்வுக்கு அவர்களைப் பழக்கத் தயாராக இல்லை. ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலைசெய்த அந்தப் பள்ளிச் சிறுவனுக்கு தினமும் கைச்செலவுக்கு நூறு ரூபாய் தருவார்களாம் பெற்றோர்.
திரைப்படம் பார்த்துதான் தனது பழிவாங்கும் குணம் அதிகரித்ததாகக் கூறுகிறான் அந்தப் பள்ளி மாணவன். சகோதரியாகப் பழகிய பெண்ணை போதையில் கற்பழிக்கிறார்கள் நான்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள். இறைவா, நாங்கள் எங்கே போகிறோம்?

Help you one another in righteousness and piety but do not help one another in sin and transgression. And fear GOD. Verily, GOD is Severe in punishment. (Quran: 5:2)

Monday, June 27, 2011

மத்ஹபுகளுக்கும் நான்கு இமாம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை (நபியை) நாம் அனுப்பும் போதெல்லாம்

‘எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம்.நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள்’என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.
(அல் குர்'ஆன்:43:23)

இன்று உலகில் வாழம் முஸ்லிம்களில் கணிசமானோர் நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றுகின்றனர. இம்மத்ஹபுகளைத் தொகுத்தவர்கள் கண்ணியமிக்க இமாம்களான அபுஹனிபா,ஷாபிஈ, மாலிகி, ஹம்பலி, ஆகியோர்கள்தான் என்றும் நம்புகின்றனர்.

இந் நம்பிக்கை முற்றிலும் தவறானதாகும். எவ்வாறு இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையோ, அதே போன்று மத்ஹபுகளுக்கும் நான்கு இமாம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இமாம்கள் மத்ஹபுகளைத் தொகுக்கவுமில்லை, தங்களை பின்பற்றுங்கள் என்று சொல்லவுமில்லை.. இவ்விமாம்கள் மீது கொண்ட அளவுகடந்த பக்தியினால் இவர்களின் மாணவர்களால் உருவாக்கப்பட்டவைகளே மத்ஹபுகள்.

இவர்கள் மரணித்து பலநுறு ஆண்டுகளுக்குப் பின்னால் எழுதப்பட்டவைகளே இன்று ஷாபிஈ மத்ஹபில் மார்க்கத்தீர்ப்பு வழங்கக்கூடிய (பத்வா) நூல்களான

1.நூல் அல்மஜ்மூ ஷரஹுல் முஹத்தப்
ஆசிரியர்: அபு ஸகரிய்யா முஹியித்திpன் இப்னு ஷரப் அன் நவவி
பிறந்த வருடம்: ஹிஜ்ரி 631
இறந்த வருடம்: ஹிஜ்ரி 676
இமாம் ஷாபிஈ அவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 427 வருடங்கள்

2.நூல் பத்ஹுல் முயுன்
ஆசிரியர்: ஸைனுத்திpன் இப்னு அப்துல் அஸிpஸ் அல்மலேபாரி
இமாம் ஷாபிஈ அவர்களுக்கும் இன்நுpல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் சுமார் 7 நூற்றாண்டுகள்

3.நூல் இஆனதுத் தாலிபின்
ஆசிரியர் முஹம்மத் ஷதா அத்திம்யாதி
பிறந்த வருடம்: ஹிஜ்ரி 1266
இறந்த வருடம்: ஹிஜ்ரி 1302
இமாம் ஷாபிஈ அவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 1062 வருடங்கள்

ஷாபிஈ (ரஹ்) அவர்களுடைய பெயரால் ‘ஷாபிஈ மத்ஹப் நூல்கள்’ என அழைக்கப்படும் இந்நூல்களுக்கும் இமாம் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.

இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இமாம் அவர்கள் கூறிய மார்க்கத்தீர்ப்புகள் என அழைக்கப்படும் இந்நூல்கள் யாவும் இமாம் அவர்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டது என்பது மேலே கூறப்பட்ட சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

அதே போன்று இமாம் அபு ஹனிபா மரணித்து பலநூறு ஆண்டுகளுக்கு பின்னால் எழுதப்பட்டவைகளே ஹனபி மத்ஹபில் மார்க்கத்திpர்ப்பு வழங்கக்கூடிய (பத்வா)நூள்களான.

நூல் துர்ருல் முக்தார்
ஆசிரியர் பெயர்: முஹம்மது அலாவுதீன் ஹஸ்காபி
பிறந்த வருடம் :ஹிஜ்ரி 1025
இறந்த வருடம் :ஹிஜ்ரி 1088
இமாம் அபூஹனீபாவிற்கும்இ இந்நூலின் ஆசிரியருக்கும்இடைப்பட்ட காலம் 900 ஆண்டுகள்.

நூல் பதாவா ஆலம்கீரி
ஆசிரியரின் பெயர்:முகலாய மன்னர் அவ்ரங்கசீப் காலத்து உலமாக்கள்.
எழுதப்பட்ட காலம் :ஹிஜ்ரி 1118
இமாம் அபூஹனீபாவிற்கும் இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 975 ஆண்டுகள்

நூல் :கன்ஜுத் தகாயிக்
ஆசிரியரின் பெயர் :அபுல் பரக்கத் அன்னாசாபி
இறந்த வருடம் :ஹிஜ்ரி 710
இமாம் அபூஹனீபாவிற்கும்இ இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 560 ஆண்டுகள்

நூல் ஹிதாயா
ஆசிரியரின் பெயர் :அலி பின் அபீபக்கர்
பிறந்த வருடம் :ஹிஜ்ரி 511
இறந்த வருடம் :ஹிஜ்ரி 593
இமாம் அபூஹனீபாவிற்கும்இ இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள்.

அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய பெயரால் ‘ஹனஃபி மத்ஹப் நூல்கள்’ என அழைக்கப்படும் இந்நூல்களுக்கும் இமாம் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.

இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இமாம் அவர்கள் கூறிய மார்க்கத்தீர்ப்புகள் என அழைக்கப்படும் இந்நூல்கள் யாவும் இமாம் அவர்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டது என்பது மேலே கூறப்பட்ட சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.மேலும்.

நான்கு இமாம்களும் தங்களைப் பின்பற்றுமாறு ஒருபோதும் கூறவுமில்லை மாறாக ...

1.இமாம் ஷாபிஈ(ரஹ்) கூறுகிறார்கள்:

எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனும் (சில) தவறி விடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போது அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத் தரும்போது அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால் ரசூல்(ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையுமாகும்.
ஆதாரம் : தாரீகு திமிஷ்க் (இப்னு அஸாகிர்) பாகம் 3 இ பக்கம் 15ஈகாழுல் ஹிமம் பக்கம் 100

‘ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்லை’ என்று முஸ்லிம்கள் அனைவரும் ‘இஜ்மாவு’ செய்துள்ளனர்.
ஆதாரம் : ஈகாழுல் ஹிமம் பக்கம் 68

2. இமாம் அபூஹனீபா(ரஹ்) கூறுகிறார்கள்:

ஹதீஸ் சஹீஹாக (ஆதாரப் பூர்வமாக) கிடைக்கும் போது அதைப் பின்பற்றுவதே உனது கொள்கையாகும்.
ஆதாரம் :- ஹாஷியா இப்னு ஆபிதீன். பாகம் 1இ பக்கம் 63ரஸ்முல் முப்தீ பாகம் 1இ பக்கம் 4ஈகாழுல் ஹிமம் பக்கம் 62

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம்’ என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை.
ஆதாரம் :- அல்இன்திகா பக்கம் 145

3. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் (சில ேநரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான் எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! குர்ஆனுக்கும் நபி வழிக்கும் ெபாருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்! குர்ஆனுக்கும் நபி வழிக்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டு விடுங்கள்!
ஆதாரம் :- ஜாமிவு இப்னு அப்துல்பர் பாகம் 2இ பக்கம் 42.உஸுலுல் அஹ்காம்இ பாகம் 6இ பக்கம் 149ஈகாழுல் ஹிமம் இ பக்கம் 72.

நபி(ஸல்) அவர்களின் சொல்லைத் தவிர வேறு எவரது சொற்களிலும் எடுக்கத் தக்கவைகளும் உண்டு நபி(ஸல்) அவர்கள் சொல் மட்டுமே முற்றாக எடுக்கப்பட வேண்டியவை.
ஆதாரம் : இர்ஷாதுஸ்ஸாலிக் பாகம் 1 பக்கம் 227ஜாமிவு இப்னு அப்துல் பர் பாகம் 2 பக்கம் 91.

4. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) கூறுகிறார்கள்:

என்னையோ மாலிக் ஷாபீஈ அவ்ஸாயீ ஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன் ஹதீஸிலிருந்து) நீயும் புரிந்து கொள்!
ஆதாரம் : ஈகாழுல் ஹிமாம்இ பக்கம் 113.

ஷாபி, ஹனபி மத்ஹப்களின் சட்டவிளக்க ஞானக் கடல்கள் என மத்ரஸாக்களில் வைத்து மாணவர்களுக்குப் போதிக்கப்படும் மேற்கூறப்பட்ட நுpற்களில் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்துக்கள் நிறையவே இருக்கின்றன. அல்லாஹ்வின் தெளிவான வசனங்களையும் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் விட்டுவிட்டு மனிதர்கள் தம் கரங்களால் எழுதியவைகளை மார்க்கத் தீர்ப்புகள் என நம்பி செயல்படுபவர்கள் அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைப் பற்றி சிந்திக்க கடைமைப் பட்டுள்ளார்கள்

முஸ்லீம்களே சிந்திப்பீர்களாக !

Friday, March 4, 2011

கொகா கோலா ரகசியம் முஸ்லீம்களே உஷார்!


உலக குளிர்பான வரலாற்றில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படும் கொகா கோலா குளிர்பானத்தின் ரகசிய பார்முலா வெளியாகியுள்ளது.

கடந்த 125 வருடங்களாக குளிர்பான தயாரிப்பில் ஈடுபடும் கொகா கோலா நிறுவனம் தனது குளிர்பான தயாரிப்பில் ஒரு கலக்கப்படும் கலவைகளில் ஒரு சில பொருட்களை மாத்திரமே தனது தயாரிப்பில் வெளியிட்டு வந்துள்ளது.

இது வரைக்கும் கொகா கோலாவின் உண்மையான கலவை பற்றிய பார்முலா ரகசியம் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த ரகசியத்தில் தான் கோலாவின் ருசியின் பார்முலாவே அடங்கியிருந்திருக்கிறது. தற்போது அந்த பார்முலா வெளியாகிவிட்டதினால் கோலா பற்றிய பல தகவல்கள் உலகுக்கு கிடைத்துள்ளது.

கோலாவின் பார்முலாவுக்குறியவர் யார்?

கொகா கோலாவின் மறைக்கப்பட்டிருந்த பார்முலாவை கண்டு பிடித்தவர் ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் ஆவார். அவா் கண்டுபிடித்ததிலிருந்து 125 வருடங்களாக அந்த பார்முலா ரகசியமாக பாதுகாக்கப்பட்டே வந்தது.

1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கொகா கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது.

கொகா கோலா எனதால் உருவாகிறது.

கொகா கோலா அடைக்கப்பட்டு வரும்பாட்டில்களில் கொகா கோலாவின் தயாரிப்புக் கலவைகள் பற்றிய ஒருகுறிப்பும் இருக்கும். அந்தக் குறிப்பில் சக்கரை, தண்ணீர், மற்றும் நிறமிகள் (கலர்)கள் கலக்கப்படுவதாகவும், அத்துடன் காபைன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ற ஒரு வாசகமும் இருக்கும்.

ஆனால் இந்த காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் பற்றிய உண்மையான பார்முலா யாருக்குமே தெரியாது. அது ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

கசிந்தது பார்முலா ரகசியம்.

இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.

அந்தத் தகவலை பிரபல செய்தி ஊடகமான அல்ஜஸீராவும் வெளியிட்டுள்ளது.

இது வரைக்கும் இந்த பார்முலா அடங்கிய ரகசிய காகிதம் கொகா கோலா நிறுவனத்தின் மூலம் அமெரிக்க வங்கி லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.

ஏற்கனவே 1979 ல் ஜார்ஜியா மாநில உள்ளூர் நாளிதழ் ஒன்றில் இது வெளியானதாக தெரிகிறது. ஆனால் இப்போது இருப்பது போல கோகா கோலாவின் புகழ் அப்போது பெரிதாக இல்லை என்பதால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.

கொகா கோலாவின் ரகசிய பார்முலா எது?

கொகா கோலா என்ற குளிர்பானத்தை தயாரிப்பதற்கு பயண்படுத்தப் படும் பொருட்களுன் சேர்த்து காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்களையும் சேர்ப்பதாக கொகா கோலா நிறுவனம் தனது தயாரி்ப்புகளில் வெளியிட்டாலும் அந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ன என்ற ரகசிய பார்முலா இப்போது தான் வெளியாகியுள்ளது.

இதுதான் அந்த ரகசிய பார்முலா.

Fluid extract of Coca 3 drams USP.

Citric acid 3 oz .

Caffeine 1oz .

Sugar 30 (it is unclear from the markings what quantity is required).

Water 2.5 gal.

Lime juice 2 pints 1 qrt.

Vanilla 1oz .

Caramel 1.5oz or more to colour.

7X flavour (use 2oz of flavour to 5 gals syrup).

Alcohol 8oz .

Orange oil 20 drops.

Lemon oil 30 drops.

Nutmeg oil 10 drops.

Coriander 5 drops.

Neroli 10 drops.

Cinnamon 10 drops.

பார்முலா வெளிவந்த விதம்.

கொகா கோலாவின் இந்த ரகசிய பார்முலா கலந்த ரகசியம் அந்த நிறுவனத்தின் மிக முக்கிய இரண்டு பேரைக் கொண்டுதான் தயாரிக்ப்படுகிறதாம்.

அவர்கள் மூலம் இந்த ரகசியம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அமெரிக்க வங்கி லாக்கரில் இருக்கும் இந்த ரகசிய பார்முலாவின் எழுத்து வடிவ காகிதத்தின் போட்டோ பிரதியை This American Life's என்ற சஞ்சிகை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜஸீரா இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யுங்கள்.

கொகா கோலா பற்றிய மார்க்கத்தின் நிலைபாடு என்ன?

கொகா கோலாவின் கலவையில் கலக்கப் படும் பல ரசாயனங்களில் அல்கஹாலும் ஒன்றாக இருக்கிறது. அல்கஹாலைப் பற்றிய மார்க்கதின் நிலைபாட்டை முதலில் நாம் தெரிந்து கொண்டாலே கொகா கோலா பற்றிய மார்க்கத் தெளிவை லேசாகப் புரிய முடியும்.

ஆல்கஹால் பற்றிய இஸ்லாத்தின் நிலைபாடு என்ன?

ஆல்கஹால் போதையை உண்டுபண்ணக் கூடிய ஒன்றாகும். போதை தரும் எந்தப் பொருளையும் நாம் உண்ணக் கூடாது என்பது மார்க்கத்தின் கட்டளை.

போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

6124 حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ لَهُمَا يَسِّرَا وَلَا تُعَسِّرَا وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا وَتَطَاوَعَا قَالَ أَبُو مُوسَى يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنْ الْعَسَلِ يُقَالُ لَهُ الْبِتْعُ وَشَرَابٌ مِنْ الشَّعِيرِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ رواه البخاري

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் "அல்பித்உஎனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் "மிஸ்ர் என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி)

நூல்: புகாரி 6124

அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: திர்மிதீ 1788> நஸயீ 5513> 3725

و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி> நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால்> போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.

இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் (3995)

3728 وَفِي حَدِيثِ صَالِحٍ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ شَرَابٍ مُسْكِرٍ حَرَامٌ رواه مسلم

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள்.

முஸ்லிம் (4071)

மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காக இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் போதை ஏற்படும்.

எனவே அல்கஹாலைப் பருகுவதும் கூடாது அல்கஹால் சேர்க்கப்படும் கொகா கோலாவைப் பருகுவதும் கூடாது என்பது தான் மேற்கண்ட செய்திகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் மார்க்கத்தின் தெளிவான நிலைபாடாகும்.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
TKS RASMIN M.I.Sc