Share

Wednesday, February 16, 2011

‘ஃபத்வா’ ஓர் விளக்கம்

மார்க்கச் சட்டம் குறித்துக் கேட்கப்படும் கேள்விக்கு அது குறித்த மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துச் சொல்வதே ஃபத்வா என்று கூறப்படும். ஃபத்வா வழங்கும் மார்க்க அறிஞர் முஃப்தி என அழைக்கப்படுவார்.

இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். எனவே ஒரு முஸ்லிமின் முழு வாழ்வும் மார்க்க வழிகாட்டலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அவனது இபாதத்(வணக்கம்), இல்லற வாழ்வு, பொருளீட்டல் அனைத்தையும் அவன் மார்க்க அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்படும் போது அலை அலையாகக் கேள்விக் கணைகள் எழுவது இயல்பே! எனவே மார்க்க அறிஞர்களிடம் அவற்றுக்கான தெளிவைப் பெறுதல் அவசியமாகின்றது. இந்த வகையில் ‘ஃபத்வா’ என்பது மிக முக்கியமான ஒரு அம்சமாகத் திகழ்கின்றது.

‘(நபியே!) உம்மிடம் அவர்கள் (‘கலாலா” பற்றி) மார்க்கத் தீர்ப்புக் கோருகின்றனர்..” (4:176)

‘(நபியே!) பெண்கள் விஷயத்தில் அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்புக் கோருகின்றனர்..” (4:127)

‘(நபியே!) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கின்றனர்..” (2:189)

‘(நபியே!) புனித மாதத்தில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கின்றனர்..” (2:217)

(மேலும் பார்க்க: 2:215, 217, 219, 5:4, 8:179:42)

மேற்படி வசனங்களில் மக்கள் கேட்கும் கேள்விகளைக் குறிப்பிடும் அல்லாஹ், அவற்றுக்கான பதில்களையும் கூறியிருப்பது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குவது முக்கியமான ஒரு பணி என்பதை உணர்த்துகின்றது. அடுத்து, மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குவதை அல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் பணிகளில் ஒன்றாகத் திருமறைக் குர்ஆனில் குறிப்பிடுகின்றான். இதன் மூலம் ஃபத்வா என்பது உயர்தரமான பணி என்பதை அறியலாம்.

‘ஃபத்வா’ என்பது அல்லாஹ்வுடைய மற்றும், அவனது தூதருடைய கூற்றுகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மார்க்கத் தீர்ப்புக் கூறுகின்ற முக்கிய பணி என்பதால் இந்தப் பணியில் தகுதியற்றவர்கள் ஈடுபடக் கூடாது. மார்க்க அறிவும், ஷரீஆவின் இலட்சியங்களையும், மார்க்கச் சட்ட விதிகளையும் அறியாதவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டால் அது சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சினைகளை உண்டு பண்ணி விடும்.

எனவேதான் மார்க்கத் தீர்ப்புகளை வேண்டி நிற்பவர்கள் அந்தத் தீர்ப்புகளை மார்க்க அறிஞர்களிடம் தான் கேட்க வேண்டும். முற்காலத்தில் 99 கொலைகள் செய்த ஒருவன் தனக்கு மன்னிப்பு உண்டா என ஒரு வணக்கவாளியிடத்தில் வேண்டுகின்றான். அவர் இல்லையென்கின்றார். அவன் அவரையும் கொலை செய்து விடுகின்றான். பின்னர் ஒரு அறிஞரிடம் கேட்ட போது அவர் மன்னிப்பு உண்டெனக் கூறியதுடன் அவனுக்குத் திருந்தி வாழ்வதற்கான வழியையும் காட்டினாரென ஹதீஸ் கூறுகின்றது.

தகுதியள்ளவர்கள் இந்த பணியில் ஈடுபடும்போது தேவையற்ற பிரச்சினைகள் அதிகரிக்கும் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. கேள்வி கேட்பவர்களைப் பார்த்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;

‘..நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேத) அறிவுள்ளோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.” (16:43)

அதாவது, நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் மார்க்க அறிஞர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள் எனக் கூறுவதன் மூலம் மார்க்க அறிவோ, அடிப்படைகளோ தெரியாதவர்களிடம் ஃபத்வா கேட்கக் கூடாது என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது. இதே வேளை, ஃபத்வா வழங்குபவர்களைப் பார்த்து;

‘நீங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுவதற்காக இது தடை செய்யப்பட்டது, இது ஆகுமானது எனப் பொய்யாக உங்கள் நாவுகள் வர்ணிப்பதையெல்லாம் கூறாதீர்கள். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்” (16:116)

என்றும், அல்குர்ஆன் கூறுவதன் மூலம் மார்க்கத்துக்கு முரணாக ஃபத்வா வழங்குபவர்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுகின்றனர் என்றும் அல்குர்ஆன் கண்டிக்கின்றது.

ஃபத்வாவுக்கான அடிப்படைகள்:

ஒரு ஃபத்வாவில் நான்கு அம்சங்கள் இருக்கும்:

  1. ஃபத்வாக் கேட்பவர்.
  2. ஃபத்வா வழங்குபவர்.
  3. மார்க்கக் கேள்வி.
  4. மார்க்கத் தீர்ப்பு.

1. முஃப்தி:

இவர்தான் மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துக் கூறுபவர். இவர் மார்க்க அறிவு உள்ளவராக இருப்பது முக்கிய நிபந்தனையாகும்.

‘உமக்கு எது பற்றி அறிவில்லையோ, அதை நீர் பின்பற்ற வேண்டாம். நிச்சயமாக செவிப் புலன், பார்வை, இதயம் ஆகிய இவை ஒவ்வொன்றும் விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது.” (17:36)

அறிவற்ற விஷயத்தில் தலையிடக் கூடாது என அல்குர்ஆன் கண்டிக்கின்றது. மார்க்க அறிவு அற்றோர் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பணியில் ஈடுபடக் கூடாது.

‘மானக்கேடானவற்றில் பகிரங்கமானவற்றையும், மறைவானவற்றையும், பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுவதையும், எவ்வித ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்காமல் இருக்கும் போது அவனுக்கு இணை வைப்பதையும், அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றைக் கூறுவதையுமே எனது இரட்சகன் தடை செய்துள்ளான் என (நபியே!) நீர் கூறுவீராக!” (7:33)

இந்த வசனம் அல்லாஹ்வின் விஷயத்தில் அறியாதவற்றைப் பேசலாகாது எனத் தடுக்கின்றது. இந்த வகையில் மார்க்க அறிவு உள்ளவர்கள்தான் மார்க்கத் தீர்ப்பு அளிக்க வேண்டும். அறிவு எனும் போது குர்ஆன், ஹதீஸுடைய அறிவுடன் உஸூலுல் குர்ஆன், உஸூலுல் ஹதீஸ், இஸ்லாமிய ஷரீஆவின் நோக்கங்கள் என்பவற்றையும் அறிந்திருக்க வேண்டும். இதே வேளை உலக நடைமுறை, மக்கள் நிலவரம் என்பவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.

இது குறித்து இமாம் இப்னுல் கைய்யூம்(ரஹ்) அவர்கள் பேசும் போது பின்வருமாறு கூறினார்கள்; ‘ஃபத்வா வழங்குபவர் மக்களின் நிலைமைகளையும், அவர்களது சதிகள் பற்றியும் அறிந்து இருப்பது அவசியமாகும்! அப்படியில்லை எனில் அவரும் தடம் புரண்டு விடுவார்! மற்றவர்களையும் தடம் புரழச் செய்து விடுவார்!”

அடுத்து, ஃபத்வா வழங்குபவர் தனது அறிவுக்கு ஏற்ப அமல் செய்பவராக இருக்கவும் வேண்டும்.

‘நீங்கள் வேதத்தைப் படித்துக் கொண்டே, உங்களை மறந்து விட்டுப் (பிற) மனிதர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்களா?” (2:44)

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாத வற்றை ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாதவற்றைக் கூறுவது அல்லாஹ்விடம் கோபத்தால் பெரிதாகிவிட்டது.” (61:2-3)

2. தீர்ப்புக் கேட்பவர்:

தீர்ப்புக் கேட்பவர், தான் கேட்கும் கேள்விக்குக் குர்ஆன் – ஸுன்னாவின் தீர்வை எதிர்பார்த்தே கேட்க வேண்டும். சிலர் தமக்குள் ஒரு முடிவை வைத்துக்கொண்டு அந்த முடிவுதான் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கேட்பர். அல்லது அந்த முடிவு கிடைப்பதற்கு ஏற்றாற்போல் கேள்வியையும், அதற்குத் தேவையான சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் உருவாக்கிக்கொள்வர். இது தவறாகும். ஸுன்னாவிலிருந்து தீர்ப்புக் கூறப்பட்டால் அதைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

‘(நபியே!) உமது இரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் தமக்கிடையில் ஏற்பட்ட சர்ச்சையில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்கும் தீர்ப்பை தம் மனங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாது ஏற்று, அதற்கு முற்றிலும் கட்டுப்படும் வரை நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.” (4:65)

கேள்வி கேட்பதில் வெட்கப்படவும் கூடாது. அல்லது தனது அறிவையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவதற்காகக் கேட்கவும் கூடாது. சிலர் ஆலிம்களைப் பரீட்சிப்பதற்காகவும், மற்றும் சிலர் தனக்கும் தெரியும் என்று காட்டிக்கொள்வதற்காகவும் கேள்வி கேட்பர். இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

3. கேட்கப்படும் கேள்வி:

கேட்கப்படும் கேள்வி நடைமுறையில் உள்ளதாகவும், விளக்கம் தேவையானதாகவும் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் என்ன செய்வது? இப்படி நடந்தால் என்ன செய்வது? என்று கற்பனையில் உதிப்பதை எல்லாம் கேள்வியாக்கக் கூடாது. இப்படி சிந்தித்த சிலர், நாயும் முஸ்லிம் பெண்ணும் அல்லது பன்றியும் முஸ்லிம் பெண்ணும் உறவு கொண்டு மனிதப் பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளை சுத்தமா? அசுத்தமா? என்றெல்லாம் கற்பனை செய்து இஸ்லாத்தின் ஃபிக்ஹ் எனும் துறையையே அசிங்கப்படுத்தினர்.

மற்றும் சிலர் மனிதனுக்குப் பன்றி இதயம் பொருத்தலாமா? இல்லையா? என இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு கூறி தஃவா களத்தைக் களங்கப்படுத்தினர். எனவே ஃபத்வாக் கேட்கப்படும் கேள்வி நடைமுறை வாழ்வுக்குத் தேவையானதாக இருக்க வேண்டும்.

4. மார்க்கத் தீர்ப்பு:

இது குர்ஆன் – ஸுன்னாவில் இருந்து பெறப்பட்டதாக இருப்பது அவசியமாகும். அப்போதுதான் அது மார்க்கத் தீர்ப்பாக இருக்கும்

(1) ஃபத்வாவின் தீர்ப்பு குர்ஆன் – ஸுன்னாவின் ஆதாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். குர்ஆன் – ஸுன்னாவுக்கு முன்சென்ற நல்லோர்கள் அளித்த ஏகோபித்த விளக்கங்களினடிப்படையில் அந்தத் தீர்ப்பு அமைய வேண்டும். அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதமிருந்தால் அவற்றில் மிகச் சரியானதையும், வலுவானதையும் உள்ளடங்கியதாக ஃபத்வா அமைய வேண்டும்.

(2) ஃபத்வா காலத்தை உணர்ந்ததாகவும் இருக்க வேண்டும். இலகுபடுத்த வேண்டிய இடத்தில் கடுமையையோ, இறுக்கமாக இருக்க வேண்டிய இடத்தில் தளர்வையோ வழங்காததாகவும் அது அமைய வேண்டும்.

(3) ஃபத்வாவின் வாசகங்கள் மாற்றுக் கருத்துகள் வழங்கக் கூடிய விதத்திலோ, வார்த்தைகளை வைத்து விளையாடும் வண்ணமோ இருக்காமல் நேரிடையாகவும், தெளிவாகவும் அமைந்திருத்தல் வேண்டும்.

(4) ஃபத்வா கேட்பவர்களிடம் கேள்வியையும், பிரச்சினை என்ன என்பதையும் மிகத் தெளிவாகக் கேட்டறிந்து ஃபத்வா வழங்கப்படல் வேண்டும்.

(5) கேள்வி கேட்பவர் கேட்ட கேள்விக்கு மட்டுமன்றி அவருக்கு மேலதிக விளக்கமும் தேவை என்றிருந்தால் அதையும் தெளிவுபடுத்தும் விதத்தில் ஃபத்வா அமைந்திருத்தல் வேண்டும். ‘கடற்பயணம் செய்வோர் கடல் நீரில் உழூச் செய்யலாமா?” எனக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் அந்தக் கேள்விக்கு

மட்டும் பதில் சொல்லாமல் ‘கடல் நீர் சுத்தமானது! அதில் வாழும் உயிரினங்கள் இறந்தாலும் ஆகுமானவை!” என்று மேலதிக விளக்கத்தையும் அளித்தார்கள். இந்த அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விக்கும், அதனுடன் தொடர்புபட்ட கேட்கப்படாத கேள்விகளுக்கும் கூட தீர்வாக அமையும் விதத்தில் மார்க்கத் தீர்ப்பு அமைதல் வேண்டும்.

(6) பயனற்ற கேள்விகளுக்கு ஃபத்வா வழங்குவதைத் தவிர்த்துவிட்டு பயனளிக்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும்.

இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் ‘கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிப்பவன் பைத்தியக்காரனாகத்தான் இருப்பான்!” என்று கூறியுள்ளார்கள்.

இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது நீண்ட நேரம் மௌனமாக இருந்தார்கள். இது குறித்துக் கேட்ட போது இதற்கு பதிலளிப்பதை விட பதிலளிக்காமல் மௌனமாக இருப்பது சிறந்ததா? என்று தீர்மானித்துத்தான் பதிலளிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்கள். சில கேள்விகளுக்கு மௌனமே சிறந்த பதிலாகவும், சில கேள்விகளுக்கு புறக்கணிப்பே சிறந்த பதிலாகவும் அமையலாம்.

2:189 வசனத்தில் ‘அவர்கள் பிறை தொடர்பாகக் கேட்கின்றனர்’ என்று கூறும் அல்லாஹ், பிறை தொடர்பாக அவர்கள் கேட்ட கேள்வியை விடுத்து அவர்களுக்கு பயனளிக்கும் பதிலை மட்டுமே அளிக்கின்றான். இந்த வகையில் பயனற்ற, ஃபித்னாவை உண்டு பண்ணக் கூடிய தீய உள்நோக்கங்களுடன் கேட்கப்படக் கூடிய கேள்விகளைப் புறக்கணித்தல் வேண்டும்.

(7) பதிலளிப்பதில் அவசரத் தன்மையைத் தவிர்க்க வேண்டும். சிலர் கேள்வி முடிவதற்கு முன்னரே பதிலளிக்க முந்தி விடுவர். கேள்வி இதுதான் என்பதும், அதற்கு உரிய பதில் என்ன என்பதும் முன் கூட்டியே தெரிந்திருந்தால் பிரச்சினை இல்லை. அப்படியில்லை என்றால் தீர்ப்புக் கூறுவதில் தீவிரம் காட்டலாகாது.

(8) தெரியாத விஷயம் குறித்துக் கேட்டால் அதற்குத் தெரியாது என்று தெளிவாகக் கூறுபவராக முஃப்தி இருக்க வேண்டும். இமாம் மாலிக்(ரஹ்), ஷாஃபீ(ரஹ்) போன்ற பெரும் பெரும் இமாம்கள் எல்லாம் தம்மிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்குத் ‘தெரியாது!” என்பதையே பதிலாக அளித்துள்ளனர். இதை அவர்கள் கௌரவப் பிரச்சினையாகவோ, தம்முடைய ஆளுமையைக் குறைத்து விடக் கூடியதாகவோ கருதவில்லை.

(9) கோபம், பசி, கவலை, தூக்கம், களைப்பு, சுகவீனம் போன்ற நிலைகளில் ஃபத்வா வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

(10) ‘ஃபத்வா’ எனும் மார்க்கத் தீர்ப்புக்கும், ‘அல்கழா’ என்ற நீதிமன்றத் தீர்ப்புக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். ஃபத்வா என்பது கோர்ட் தீர்ப்பு அல்ல. அதை யாரும் யாருக்கும் திணிக்கவும் முடியாது. நீதிபதிகள் தீர்க்க வேண்டிய விஷயங்களில் தலையிடும் விதத்தில் முஃப்திகள் செயற்பட முடியாது.

(11) இஜ்திஹாதுக்கு உரிய விஷயமொன்றில் கருத்து வேறுபாடு எழுந்தால் ஃபத்வா வழங்கும் முஃப்தி நடுநிலையாகவும், தாராளத் தன்மையுடனும் தீர்ப்பு வழங்க வேண்டும்.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களிடம் ‘இஜ்திஹாதுக்கு உரிய மஸ்அலாவில் உலமாக்களை தக்லீது செய்வோர் கண்டிக்கப்படுவார்களா?” எனக் கேட்கப்பட்ட போது, ‘இஜ்திஹாதுக்கு உரிய மஸ்அலாவில் சில உலமாக்களின் கருத்துப் படி செயற்படுவோர் மறுக்கப்படவும் மாட்டார்கள்! வெறுக்கப்படவும் மாட்டார்கள்! இரண்டு கருத்துகளில் எந்தக் கருத்தின் அடிப்படையில் செயற்பட்டவர்களும் எதிர்க்கப்படவும் மாட்டார்கள்!..” என்று குறிப்பிடுகின்றார்கள். எனவே மஸ்அலா இஜ்திஹாதியா விஷயத்தில் நிதானமாகத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

(12) ஃபத்வாக்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் கவனம் தேவை. எதிரும் புதிருமான ஃபத்வாக்கள் வெளியாகி பொது மக்கள் திணரும் நிலை ஏற்படக் கூடாது. இதைத் தவிர்ப்பதற்காக தகுதியற்றவர்கள் ஃபத்வா வழங்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும். ஒரு அறிஞர் குறிப்பிடும் போது ‘திருடர்களை விட ஃபத்வா வழங்கும் சிலர் சிறையில் இருக்கத் தகுதியானவர்கள்!” என்று குறிப்பிடுகின்றார்.

எனவே மருத்துவச் சான்றிதழ் பெறாதவர் மருத்துவம் செய்தால் தண்டிக்கப்படுவது போன்று அறிவு இல்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்கி சமூகத்துக்கு மத்தியில் ஃபித்னாவை ஏற்படுத்துவோர் இஸ்லாமிய சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய அரச அமைப்பு இல்லாதபட்சத்தில் ஃபத்வா வழங்க முன்வருவோர் இறை அச்சத்துடன் நான் இதற்குத் தகுதியானவன் தானா? என்பதை நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். அடுத்து, தனி நபர் ஃபத்வாவாக இல்லாமல் மார்க்க விஷயங்களைக் கூட்டு முயற்சியில் ஆராய்ந்து தீர்ப்புக் கூறும் வழிமுறையை ஜமாஅத்துகள் முன்னெடுக்கலாம்.

சமுதாயத்தில் இல்லாத புதுக் கருத்து ஒன்றை மக்கள் மன்றத்துக்கு முன்வைப்பதற்கு முன்னர் அந்த ஆய்வை ஏனைய அறிஞர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவர்களது அபிப்பிராயங்களையும் உள்வாங்கி வெளியிடும் பக்குவத்தை தீர்ப்பு வழங்குவோர் கடைப்பிடிப்பதன் மூலமும் இந்த ஃபத்வா குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் ஃபத்வா விஷயத்தில் கடைப்பிடித்த பேணுதலும், அச்ச உணர்வும், அடுத்தவரை மதித்த போக்கும் இன்றைய உலமாக்களிடமும் இடம்பெறும் என்றால் ஃபத்வாக்களால் ஏற்படும் ஃபித்னாக்களை ஒழிக்க முடியும்.

உங்களில் ஒருவரிடத்தில் ஒரு கேள்வி வந்தால் உடனேயே நீங்கள் ஃபத்வா வழங்கி விடுகின்றீர்கள். இதே போன்ற கேள்வி உமர்(ரலி) அவர்களிடம் வந்தால் தீர்ப்புப் பெறுவதற்காக அவர்கள் மற்ற ஸஹாபாக்களை ஒன்றுதிரட்டியிருப்பார்கள் என அபூ ஹுஸைன்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

கலீஃபாக்கள் ஃபத்வா விஷயத்தில் கடைப்பிடித்த பேணுதலையும், அக்கறையையுமே இது எடுத்துக் காட்டுகின்றது. இது போன்ற ஒழுங்குகள் பேணப்பட்டால் அவசியமற்ற பல ஃபத்வா பித்னாக்களை தவிர்க்க முடியும்.

tkshttp://www.samuthayaotrumai.com/?p=783

எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலஃ

Wednesday, February 9, 2011

வக்பு சட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.

அறச் செயல்களான தர்மங்களில் பலவகை உண்டு. மனிதன், தன் குடும்பத்திற்காகவும், உறவினர்களுக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும், சமுதாயத்திற்காகவும் இன்னோரன்ன பல காரணங்களுக்காகவும் பல்வேறு வகைகளில் தர்மம் செய்கிறான். நன்மையையும், இறைவனின் அன்பையும் பெறுவதற்காக தர்மக் காரியங்களில் மனிதன் ஈடுபட்டாலும், அவற்றின் மதிப்பும் தரமும் உயர்ந்து விடுகிறது.
ஒரு முஸ்லிம் தன்னுடைய சொத்துக்களை இறைவனுக்காக வக்ஃபு என்ற அறம் செய்து விட்ட பிறகு அவரோ, அவருடைய வாரிசுகளோ அந்தச் சொத்துக்களின் நிர்வாகிகளாக இருக்க முடியுமே தவிர, உரிமையாளர்களோ இருக்க முடியாது.
வக்ஃபு என்றால் என்ன? அதன் பொருள் என்ன என்பதை முதலில் பார்ப்போம். நிறுத்துதல், நிலைநாட்டுதல் என்பன இதன் சொற்பொருளாகும். இறைவன் பெயரால் ஒருவர் தன் சொத்துக்களை அர்ப்பணித்து நிலை நாட்டும் போது அது வக்ஃபு சொத்து என்னும் நிலையை அடைந்து விடுகிறது. கைமாறும் தன்மையுடைய சொத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வருவதை வக்ஃபு என்று இஸ்லாமியச் சட்டம் அடையாளம் காட்டுகிறது. ஒரு சொத்தை வக்ஃபு செய்வதன் மூலம் அந்தச் சொத்தின் உரிமையை இறைவனுக்கு அர்ப்பணித்து, அதன் வருமானத்தையும், பலனையும் மக்களின் நலனுக்காக செலவிடுவதே நோக்கமாகும்.
வக்ஃபு என்பதற்கான விளக்கத்தைத் தருகின்ற போது இமாம்களிடையே கருத்து வேறுபாடு காணப்பட்டாலும், இமாம் அபூயூசுஃப் (ரஹ்) அவர்களின் கூற்றே பெரும்பாலோரால் ஏற்கப்பட்டு வருகிறது. 'வக்ஃபு செய்பவர், வக்ஃபு செய்யும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாலே போதும்' என்பது இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களின் கருத்தாகும். வக்ஃபு செய்பவர்தன் எண்ணத்தை வெளிப்படுத்திய பிறகு காஜி (நீதிபதி) அதை வக்ஃப் என ஒப்புக் கொண்டு ஆணைப்பிறப்பிக்க வேண்டும் என்றும், வக்ஃப் சொத்தை அர்ப்பணித்த பின்னும் அவரது உரிமை தொடர்கிறது என்றும் கடன் அளித்ததைப் போலவே அந்த தர்மங்கள் இருக்கின்றன என்றும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கருதுகிறார்கள்.
வக்ஃப் சொத்தை முத்தவல்லியிடமோ, காப்பாளரிடமோ ஒப்படைத்த பிறகே வக்ஃப் முழுமை பெறும் என்பது இமாம் முஹம்மது (ரஹ்) அவர்களின் கருத்தாகும்.
ஆனால், இமாம் அபூயூசுஃப் (ரஹ்) அவர்கள் சமுதாய நலனுக்காகவே வக்ஃப் சொத்து கொடுக்கப்பட்டாலும், அல்லாஹ்மட்டுமே அதற்கு உரிமையாளனாகி விடுகின்றான். எனவே காஜியின் ஆணை தேவையில்லை என்று விளக்கமளிக்கிறார்கள்.
காசிமியாசோடீஸ் - Vs - செயலாளர், மெட்ராஸ் ஸ்டேட் வக்ஃபு போர்டு (1964) என்ற வழக்கின் தீர்ப்பில் வக்ஃப் என்பதற்கு முக்கியமான மூன்று விளக்கங்கள் தரப்பட்டன.
1. வக்ஃப் சொத்தின் அர்ப்பணிப்பு சமய நோக்கு கொண்டதாக இருக்க வேண்டும்; சமய சார்பற்ற நோக்கைக் கொண்ட அன்பளிப்பு அர்ப்பணம், டிரஸ்ட் எனப்படும் பொறுப்புரிமை அமைப்பு என்றாகுமே தவிர வக்ஃப் ஆக முடியாது.
2. வக்ஃப் நிரந்தரத் தன்மை உடையதாக இருக்க வேண்டும். அப்படி நிரந்தரத்தன்மை இல்லாதவை ஸதகா என்னும் அறச்செயலாக அமையுமே தவிர, .இஸ்லாமியச் சட்டப்படிவக்ஃப் என அழைக்க முடியாது.
3. வக்ஃபின் நுகர் உரிமை மனிதநலனுக்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும்.
பொருளடக்கம் [மறை]
1 இந்திய வக்ஃப் சட்டம்
2 வக்ஃபின் வகைகள்
3 முத்தவல்லி நியமனம் குறித்த வழிமுறைகள்
4 வக்ஃப் வாரியம்
5 வக்ஃப் அசையா சொத்து
6 தண்டத்தொகை பிரிவு (41-(1)
[தொகு]இந்திய வக்ஃப் சட்டம்

இந்தியாவில் வக்ஃப் செல்லுபடியாகும் சட்டம் 1913ல் இயற்றப்பட்டது. தன் தேவைக்கு அதிகமான சொத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அதை மனித நலனுக்காகப் பயன்படுத்துவது கடமையாகும். இந்த அடிப்படையிலேயே வக்ஃப் மற்றும் டிரஸ்ட் ஆகியவை உருவாகின. ரீஅத் அடையாளம் காட்டுகிற நபி வழி, இறையச்சம், தர்மம் ஆகிய நோக்கங்களுக்காக நிரந்தரத் தன்மையுடன் அல்லாஹ்விற்காக சொத்தை அர்ப்பணிக்கும் போது அது வக்ஃப் என அழைக்கப்படுகிறது.
டிரஸ்ட் என்பது அப்படியல்ல. சொத்துரிமை ஒருவருக்கு தரப்படுவதோடு, வேறு ஒருவருக்கும் அதை மாற்றம் செய்யலாம்.
வக்ஃப் முழுமை பெறுவதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகள் தேவை. 1.நிலையான அர்ப்பணம் 2. வக்ஃபை அறிவித்தல் 3. உயில் மூலம் வக்ஃப் (உயில் வாயிலாக வக்ஃப் செய்தால் சொத்தின் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே வக்ஃப் செய்ய முடியும்) 4. நிரந்தரத் தன்மை உடையது.
5. இடம் பெயராச் சொத்து. ஹிதாயா என்னும் சட்டப்புத்தகத்தின் கருத்துப்படி இடம்பெயரும் பொருள்களை வக்ஃப் செய்தல் பொருந்தாது. எனினும் ஹிதாயாவின் காலத்துக்கு முன்பிருந்தே இத்தகைய பொருள்களை வக்ஃப் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

வக்ஃபின் வகைகள்

வக்ஃப் அளிப்பவருக்கு வாகிஃப் என்று பெயர். பொது வக்ஃப், தனி வக்ஃப் என இருவகைப்படும். எனினும், பொது வக்ஃப், பாதி பொது, தனி வக்ஃப் என மூன்று வகையான பிரிவுகள் அதிகமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
பாலம், கிணறு, சாலை போன்ற தர்மங்களை அர்ப்பணிக்கும் போது அவை பொது வக்ஃப் ஆகிவிடும். குடும்ப நலனுக்காகப் பாதியும், பொது நலனுக்காகப் பாதியும் அர்ப்பணிக்கப்படும் போது பாதி பொது வக்ஃப் ஆகும். வக்ஃப் அளிப்பவரின் குடும்ப நலனுக்கும், உறவினருக்கும் மட்டுமே நன்மை அளிப்பது தனி வக்ஃப் ஆகும். இதனை 'வக்ஃபுன் அலல் அவ்லாத்' என்பர். ஒரு முஸ்லிம் வக்ஃப் ஏற்படுத்தி, அதன் பயனை உற்றார் உறவினர் நலனுக்கு உடனடியாகத் தந்து, அவர்கள் காலத்துக்குப் பிறகு மார்க்கம் அனுமதிக்கும் அறச் செயல்களுக்குப் பயன்படுத்துமாறு அறிவிப்பதே 'வக்ஃபுன் அலல் அவ்லாத்' ஆகும்.இஸ்லாமியச் சட்டப்படி, ஏழை எளிய குடும்பத்தார்க்கு வக்ஃப் சொத்தின் வருமானங்களைக் கொடுத்து குடும்பத்தார் இல்லாது போனால் முஸ்லிம் சமுதாயத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தாலும் அந்த வக்ஃப் செல்லும். ஆனால் மேற்கத்திய தத்துவப்படி குடும்பத்தினருக்கு கொடுப்பது தர்மமாகாது. இந்தத் தத்துவம் இந்திய நீதிமன்றங்கள் சில வழக்குகளில் வழங்கிய தீர்ப்பில் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கதாகும். 'அப்துல் பத்தாஹ் Vs விரசமையா (1894)' என்ற வழக்கில், வக்ஃப் சொத்தின் வருமானம் குடும்பத்திற்கு என்றும், அவர்களுக்குப் பிறகு சந்ததிகள் இல்லாது போனால் பொது மக்களுக்கு என்றும் ஏற்படுத்தப்பட்ட வக்ஃப் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ஷரீஅத் சட்டத்திற்கு மாறானதாக இருந்தால் முஸ்லிம் வக்ஃப் சட்டம் இயற்றுமாறு முஸ்லிம்கள் அரசைக் கேட்டுக் கொண்டனர். இதன் விளைவாகவே 1913ல் முஸ்லிம் வக்ஃப் சட்டம் ஏற்பட்டது. இந்தச் சட்டத்தின்படி குடும்பத்தின் நலனை முற்படுத்தி ஏற்படுத்தப்படும் வக்ஃப் செல்லும் என்றானது. வக்ஃப் செய்தவர் தன் வாழ்க்கை முழுவதும் தன்னுடைய பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் நிபந்தனையிட்டிருந்தாலும், வாழ்நாளில் பட்ட கடனைத் தீர்க்க வகை செய்திருந்தாலும் வக்ஃப் செல்லும் என்பது ஹனபி மத்ஹபுச் சட்டமாகும். அசையும் சொத்து, அசையாச் சொத்து, பணம் ஆகியவற்றை வக்ஃப் செய்தாலும் ஷரீஅத் சட்ட வரம்புக்கு உட்பட்டிருப்பின் செல்லும்.
1913ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் ரத்துக்கள் அந்த ஆண்டுக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட குடும்ப வக்ஃப்களை மட்டுமே செல்லுபடியாக்கியது. அதற்கு முந்தைய வக்ஃப் களை அல்ல என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வந்தன. பின்னர் 1933-ல் முஸ்லிம் வக்ஃப் சட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 1913க்கு முந்தைய வக்ஃபுகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
வக்ஃப் சொத்துக்களைச் சரியான முறையில் பராமரிக்காமலும், நிர்வாகம் செய்யாமலும் விட்டு விடும் போது அவை வீணாகிப் போகின்றன. எந்த உயரிய நோக்கத்திற்காக, பொது நன்மைக்காக வக்ஃப்கள் ஏற்படுத்தப்பட்டனவோ அந்த நோக்கங்களை எட்ட முடியாமல் போய்விடும். எனவே, வக்ஃபை பராமரிக்கும் பொறுப்பினை ஏற்கும் முத்தவல்லிகள் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.

முத்தவல்லி நியமனம் குறித்த வழிமுறைகள்

முத்தவல்லி நியமனம் குறித்த வழிமுறைகள் தெளிவாக உள்ளன. 1. வக்ஃப் செய்த வாகிஃபே முத்தவல்லியை நியமனம் செய்யலாம். 2.வாகிஃப் முத்தவல்லியை நியமிக்காது போனால், வக்ஃபை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்ற வஸிய்யு முத்தவல்லியை நியமிக்கலாம். 3. வாகிஃபும், வஸிய்யும் வக்ஃப் பத்திரத்தில் முத்தவல்லி பற்றி ஒன்றும் குறிப்பிடாத சமயத்தில் ஏற்கெனவே முத்தவல்லியாக இருந்து வருவர் தமக்குப் பிறகு முத்தவல்லியை நியமிக்கலாம். 4. முத்தவல்லி பதவி காலியாக இருந்து, யாரை நியமிப்பது என்பதில் முடிவு ஏற்படாத நிலை இருப்பின், மாவட்ட நீதிபதி இதற்காக முயற்சி எடுக்கலாம். உரிமையியல் நடைமுறைச்சட்டம் 92-வது பிரிவின் கீழ் மாவட்ட நீதிபதி முத்தவல்லியை நியமிக்கவோ, நீக்கவோ வழக்குப் போடலாம்.
1954 வக்ஃப் சட்டம் 36-வது பிரிவின்படி முத்தவல்லியின் கடமைகள் பின்வருமாறு, 1. வக்ஃப் வாரியத்தின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். 2.வக்ஃப் வாரியம் கேட்கும் தகவல்கள், குறிப்புகளை தயாரித்துக் கொடுக்க வேண்டும். 3.வக்ஃப் சொத்துக்களின் கணக்குகள், பதிவுகள் பத்திரங்கள் முதலியவற்றை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். 4. செலுத்த வேண்டிய பாக்கித் தொகைகளை தீர்க்க வேண்டும். 5. வக்ஃப் வாரியம் குறிப்பிடுகின்ற இதர கடமைகளை சட்டப்படி நிறைவேற்ற வேண்டும்.

வக்ஃப் வாரியம்

முதன்மைக் கட்டுரை: தமிழ்நாடு வக்பு வாரியம்
முத்தவல்லிகள் பொறுப்புடன் செயலாற்றுவதற்காக 1954-ம் ஆண்டு வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் ரத்துகளுக்கு உட்பட்டே வக்ஃப் வாரியமும், முத்தவல்லிகளும் வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்க வேண்டும். வக்ஃப் வாரியத்திற்கு எதிராக ஏதேனும் வழக்குகள் தொடர வேண்டுமானால் எழுத்துபூர்வமாக வாரியத்தின் அனுமதி பெற்று, வழக்கு தொடர்வது பற்றி அறிவிப்பு கொடுத்து, இரண்டு மாதங்கள் கழிந்த பிறகே வழக்கு தொடர முடியும்.
11 உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு வக்ஃப் வாரியம் 1958ம் ஆண்டு முதன் முதலாக உருவாக்கப்பட்டது. 1966-ல் அது கலைக்கப்பட்ட பின் 1971-ல் அடுத்த வக்ஃப் வாரியம் நிறுவப்பட்டது. மூன்றாவதாக 1984-ல் வக்ஃப் வாரியம் ஏற்பட்டது. ஆட்சி மாறும் போதெல்லாம் வக்ஃப் வாரியம் கலைக்கப்படுவதும், புதிய உறுப்பினர்களைக் கொண்ட வாரியம் நியமிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.1984ம் ஆண்டு திருத்தப்பட்ட வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. எனினும், எல்லா மாநிலங்களிலும் அது அமலுக்கு வரவில்லை. ஆதலால் அதற்கு முன்பிருந்த 1954ம் ஆண்டு சட்டமே இப்போதும் அமலில் இருக்கிறது. மத்திய வக்ஃப் கவுன்சிலுக்கு 20 உறுப்பினர்கள் இருப்பார்கள். 1954-ம் ஆண்டு வக்ஃப் சட்டம் 43வது பிரிவின்படி முத்தவல்லிகளை நீக்கும் அதிகாரம் வக்ஃப் வாரியம்வக்ஃப் வாரியத்துக்கு உண்டு. கீழ்கண்ட காரணங்களுக்காக முத்தவல்லியை வாரியம் நீக்கலாம்.
1. முத்தவல்லி வக்ஃப் வாரியத்தால் ஒரு தடவைக்கு மேல் தண்டிக்கப்பட்டிருத்தல் 2. குற்றவியல் சட்டப்படி நம்பிக்கை மோசடி அல்லது ஒழுக்கக் கேடு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டிருத்தல் 3. வக்ஃப் சொத்துக்களை கையாடல் செய்தல் அல்லது முறையற்ற வகையில் பயன்படுத்தல் 4. முத்தவல்லி பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத அளவுக்கு மனநிலை, அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டிருத்தல்.
வக்ஃப் வாரியம் முத்தவல்லியாக நியமித்த குழு, அல்லது நபர் அல்லது அதிகாரி தம் கடமையை நிறைவேற்றத் தவறினாலோ, முறைகேடாக நடந்து கொண்டாலோ, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாலோ அத்தகையவரை நீக்கிவிட்டு, புதிதாக முத்தவல்லியை வாரியம் நியமிக்கலாம்.
அப்படி ஒரு முத்தவல்லியை நீக்கும் போது, அவர் அந்த வக்ஃப் சொத்திலிருந்து பயன்பெறும் உரிமை படைத்தவராக இருந்தாலோ, வேறு எந்தத் தகுதிக்கும் அவர் உரியவராக இருந்தாலோ அந்தத் தனிப்பட்ட உரிமைகளை, பதவி நீக்கத்தின் காரணத்தினால் ரத்து செய்ய முடியாது. மேலும், வக்ஃப் சட்டம் 43(1), (2) ஆகிய பிரிவுகளின் கீழ் சுமத்தப்படும் குற்றங்களைச் சரியான முறையில் விசாரிக்காமலோ, வக்ஃப் வாரிய உறுப்பினர்களில் முக்கால் பங்கு உறுப்பினர்களின் முடிவு இல்லாமலோ ஒரு முத்தவல்லி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. 4(ஏ) பிரிவு வக்ஃப் வாரிய ஆணையினால் பாதிக்கப்பட்ட ஒரு முத்தவல்லி அந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட ஒரு மாதத்திற்குள் அதை ஆட்சேபித்து மாநில அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம். இதன்பேரில் மாநில அரசு அளிக்கும் தீர்ப்பே இறுதியானதாகக் கருதப்படும். எந்த நீதிமன்றத்திலும் அதை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியாது. வக்ஃப் வாரியத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு முத்தவல்லி அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை முத்தவல்லி ஆக முடியாது.
[தொகு]வக்ஃப் அசையா சொத்து

வக்ஃப் சட்டம் 36(ஏ,1) பிரிவின்படி வக்ஃப் வாரியத்தின் முன் அனுமதி பெறாமல் அசையா சொத்துக்களை விற்பனை செய்தாலோ, அன்பளிப்பாக வழங்கினாலோ, அடமானம் வைத்தாலோ, பரிமாற்றம் செய்தாலோ, விவசாய நிலங்களாக இருப்பின் மூன்றாண்டுகளுக்கு மேலும், விவசாயம் செய்யாத நிலம் மற்றும் கட்டடமாக இருப்பின் ஓராண்டுக்கு மேலும் குத்தகை, அல்லது வாடகைக்கு விட்டாலோ செல்லாது.
அனுமதியில்லாமல் விற்கப்பட்டது விசாரணையில் முடிவானால், அந்த அசையா சொத்துக்களை வசப்படுத்தி ஒப்படைக்குமாறு அந்த மாவட்ட ஆட்சியாளருக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கப்படும். இந்த வேண்டுகோள் கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சியர் ஓர் ஆணை பிறப்பித்து, அந்த ஆணை கிடைத்த 30 நாட்களுக்குள் அந்த சொத்தை வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைக்குமாறு தெரிவிப்பார்.
[தொகு]தண்டத்தொகை பிரிவு (41-(1)

அ) ஒரு முத்தவல்லி வக்ஃப் சொத்துக்களைப் பதிவு செய்ய விண்ணப்பிக்காமல் இருந்தாலோ, ஆ) வக்ஃப் சட்டத்தில் கோரப்படுகிறவாறு விபர அறிக்கைகள், விபரங்கள், கணக்குகள் ஆகியவற்றை அளிக்கத் தவறினாலோ, இ)வக்ஃபு வாரியம் வேண்டுகின்ற செய்திகளை, குறிப்புகளை அனுப்பத் தவறினாலோ, ஈ) வக்ஃப் சொத்துக்களின் கணக்குகள், பதிவுகள், பத்திரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய அனுமதிக்காமல் இருந்தாலோ, உ) வக்ஃப் வாரியத்தின் ஆணையின்படி வக்ஃப் சொத்தை ஒப்படைக்காமல் இருந்தாலோ, ஊ) வக்ஃப் வாரியத்தின் கட்டளைகளை நிறைவேற்றத் தவறினாலோ, எ) பொதுக்கடன் பாக்கிகளை செலுத்தாதிருந்தாலோ, ஏ) வக்ஃப் வாரியத்திற்குத் தேவைப்படுகிற எதனையும் சட்டப்படி நிறைவேற்றத் தவறினாலோ ரூ.10000 வரை அவருக்கு அபராதம் விதிக்கலாம்.
41(2) - வக்ஃப் வாரியத்தின் அதிகாரம் பெற்ற ஓர் அலுவலர் கொடுக்கும் புகார்களின் அடிப்படையிலேயே வழக்கு மன்றம் இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும். 3. மாவட்ட குற்றவியல் நீதிபதி, அல்லது முதல் வகுப்பு நீதிபதிக்குக் குறையாத அந்தஸ்து உடையவர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தில் தவறு செய்பவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டிக்க முடியும். பீபி சித்திக் பாத்திமா -ஸவி- சையித் முஹம்மது ஹஸன் 1978 புஸிஸி.ஸி.மூ.634 (றீளீ) என்ற உச்சநீதிமன்ற வழக்கில் வக்ஃப் சொத்துக்களுடைய வருமானத்தை ஒரு முத்தவல்லி தன் மனைவி பெயரில் மாற்றினால் நம்பிக்கை முறிவு ஏற்படுவதுடன், அப்படி மனைவி பெயரில் மாற்றப்பட்ட சொத்துக்களும் வக்ஃப் சொத்தாகவே கருதப்படும் என்று நீதிபதிகளான ஆர்.எஸ்.சர்க்காரியா, என்.எல்.உண்டுவாலியா, பி.எஸ்.கைலாசம் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.
முஹம்மது யூசுப் - ஸவி - முஹம்மது சாதிக் (1993) 14 யிழிழ 431/144/1.உ.273 (33) பு/ணூ.501 என்ற வழக்கில், வக்ஃப் பத்திரத்தில் வக்ஃப் சொத்தை விற்று தொகையை புனித மக்காவில் ஓய்வில்லம் கட்டுவதற்கும், அதனைப் பராமரிப்பதற்கும் முத்தவல்லிக்கு அதிகாரம் தரப்பட்டிருந்தது. வக்ஃப் பத்திரத்தில் கண்டிருக்கிற கட்டளைகளை நிறைவேற்றினால் அது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. வக்ஃப் செய்தவர், வக்ஃப் சொத்துக்களைப் பராமரிக்கும் முத்தவல்லி ஊதியம் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தால், வக்ஃப் சொத்துக்களின் பராமரிப்பு தேவை போக மீதமுள்ளதிலிருந்து தான் ஊதியம் பெற முடியும். வக்ஃப் பத்திரத்தில் முத்தவல்லியின் ஊதியத்திற்கான ஒதுக்கீடு இல்லாவிட்டால் நீதிமன்றம் பத்தில் ஒரு பங்குக்கு மிகாமல் ஒரு தொகையை நிர்ணயம் செய்யலாம். வக்ஃப் செய்தவர் முத்தவல்லி பெறக்கூடிய ஊதியத் தொகையை மிகக் குறைவாகக் குறிப்பிட்டிருந்தால், நீதிமன்றம் அவருடைய ஊதியத்தை பத்தில் ஒரு பங்குக்கு மிகாமல் அதிகமாக்கிக் கொள்ளலாம். இவை உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் இருந்து தெரிய வருகின்றன.
பெண்களை முத்தவல்லியாக நியமிக்க முடியாது. பள்ளிவாசல், தைக்கா, கான்காஹ், தர்கா போன்ற வக்ஃப் ஸ்தாபனங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. பொறுப்புரிமை அமைப்பு என்கிற டிரஸ்டுகளில் நிர்வாகத் தொடர்பாக இயற்றப்பட்டுள்ள சட்ட ஷரத்துகள் வக்ஃப்களுக்கும் பொருந்தும். வக்ஃப் சொத்துகள் அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்கப் பெற்ற பொதுச் சொத்துகளாகும். அவற்றை நேர்மையோடும், நாணயத்தோடும் பராமரித்தல் அவசியமாகும். சுயநலத்திற்காகவோ, சொந்த பந்துக்களுக்காக அவற்றைப் பயன்படுத்துதல் கூடாது. இத்தகைய பொதுச் சொத்துக்களில் ஒரு பைசாவைக் கூட துஷ்பிரயோகம் செய்தால், கையாடல் செய்தால் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிடலாகாது.
ஷரிஅத் சட்டங்களை நன்கு அறிந்தவர்களான மார்க்க அறிஞர்கள், இறையச்சமும் மார்கக்ப் பற்றுதலும் உள்ள வழக்குரைஞர்கள், பொது நலத் தொண்டர்கள் ஆகியோரை வக்ஃப் வாரிய அங்கத்தினர்களாக நியமித்தால் மைய அரசின் வக்ஃப் மன்றமும், மாநில அரசுகளின் வக்ஃப் வாரியங்களும் சிறப்பாக செயல்படும் நிலை உருவாகும்.
பகுப்புகள்: விக்கிப்

அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.

“மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்… இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன்… அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது… சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்…”
- ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.
***
கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரின் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன. 2007 நவம்பர் 11-ஆம் தேதியன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில், அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. மலேகான் நகரில் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமடைந்தார்கள்.
இப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம், பார்ப்பன – முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்று எவ்வித விசாரணையுமின்றி குற்றம் சாட்டின. 2007-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கசூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த போது, சம்ஜவ்தா விரைவு வண்டியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தியா-பாகிஸ்தானிடையே நல்லுறவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இக்குண்டு வெடிப்பை நடத்தியதாக பார்ப்பன – முதலாளித்துவ ஊடகங்கள் சகட்டு மேனிக்குக் குற்றம் சாட்டின. இது ஹூஜி மற்றும் லஸ்கர்-இ-தொய்பா ஆகிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களின் சதி என்று அமெரிக்காவும் கூறியது.
இக்குண்டு வெடிப்புகள் குறித்து ஆரம்ப விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே போலீசையும் துணை ராணுவப் படைகளையும் ஏவி முஸ்லிம் குடியிருப்புகளை அரசு சுற்றி வளைத்தது. சட்டப்படியும் சட்டவிரோதமாகவும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைக்கு ஆளாயினர். அவர்களது இளமையும் எதிர்காலமும் நொறுங்கிப் போயின. பயங்கரவாதி என்ற அவமானத்தோடு, அவர்களது குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டு கையறு நிலையில் தவித்தன. குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களைப் போலவே, குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்களும் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
***
கடந்த 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் நான்டெட் நகரில் வெடிகுண்டுகள் தயாரித்தபோது விபத்து நடந்து ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவர் மாண்டனர். ஐந்துபேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பார்ப்பன பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு அதிரடி போலீசு அடுத்தடுத்து கைது செய்து ஔரங்காபாத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களுள் 11 பேரை விடுவிக்க எத்தணித்தது. இதை எதிர்த்து உள்ளூர் முஸ்லிம்கள் போராடியதோடு, சி.பி.ஐ. விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகே, சி.பி.ஐ.யின் விசாரணை தொடங்கியது.
சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருளை முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான அறிகுறிகள் கிடைத்தன. மலேகான் குண்டு வெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இக்குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அகில பாரத வித்யார்த்தி பரிசத் எனும் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, பின்னர் அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு சிறப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டில் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டாள்.
அவளைத் தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 11 பேரை ஹேமந்த் கார்கரே கைது செய்தார். பிரக்யா சிங்கை விசாரணை செய்த போது, ம.பி.யைச் சேர்ந்த சுனில்ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முதலானோர் முக்கிய சதிகாரர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்கரே பலியானார். இதற்கிடையே சுனில்ஜோஷி இந்துவெறி பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.
மலேகான் மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரசில் வெடித்த குண்டுகள் ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்ததால், இக்குண்டு வெடிப்புகளில் இந்துவெறி பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டது. தயானந்த் பாண்டேயின் கணினியிலிருந்து கிடைத்த 37 உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டதை நிரூபித்துக் காட்டின. இதனடிப்படையில், கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.-இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டான். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18-ஆம் தேதியன்று டெல்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட அசீமானந்தா, இக்குண்டுவைப்புகளில் ஈடுபட்டது நாங்கள்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். போலீசாரின் முன்னிலையில் பெறப்படும் வாக்குமூலங்களை விட, நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சட்டப்படி உறுதியான ஆதாரங்களாகியுள்ளதால், குண்டுவைப்பு பயங்கரவாதச் செயல்களில் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.
மே.வங்கத்தைச் சேர்ந்த நாப குமார் எனப்படும் அசீமானந்தா, 1977-இல் ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியனாகி மே.வங்கத்திலும் பின்னர் அந்தமானிலும் ஆர்.எஸ்.எஸ்.-இன் பரிவாரங்களில் ஒன்றான வனவாசி கல்யாண் ஆசிரமத் தலைவராகப் பணியாற்றியுள்ளான். பின்னர் 1997-இல், இவன் குஜராத்தின் டாங் மாவட்டத்தில் ஷப்ரிதாம் என்னும் ஆசிரமத்தை நிறுவிக் கொண்டு சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தான். இவன் குஜராத் முதல்வர் மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சுதர்சன், மோகன் பாகவத் ஆகியோருக்கு நெருக்கமானவன். பயங்கரவாதிகளின் சித்தாந்த குருவான இவன்தான் அஜ்மீர், ஐதராபாத், மலேகான் முதலான இடங்களில் குண்டுவைக்க இலக்குகளைத் தீர்மானித்து வழிகாட்டியுள்ளான். 2008-இல் பெண் சாமியாரான பிரக்யா சிங் கைது செய்யப்பட்ட பிறகு, அசீமானந்தா தப்பியோடி தலைமறைவாகிவிட்டான். கடந்த 2010 நவம்பர் 19-ஆம் தேதியன்று அரித்துவாரில் பதுங்கியிருந்தபோது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டான்.
தன்னோடு இக்குண்டுவைப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்தியப் பிரதேச ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான (பிரச்சாரக்) சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான சந்தீப் டாங்கே, மூத்த ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான ராம்ஜி, தேவேந்திர குப்தா, மேல்மட்ட உறுப்பினரான சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோஹித், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான யோகி ஆதித்யானந்த், குஜராத்தின் விவேகானந்தா சேவா கேந்திரத்தின் பாரத் பாய், அந்த அமைப்பின் மாநில அமைப்பாளரான டாக்டர் அசோக், முக்கிய பிரமுகர்களான லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, ஜம்முவைச் சேர்ந்த சாரதா பீட சாமியார் தயானந்த் பாண்டே ஆகியோரின் பெயர்களையும் அவன் வாக்குமூலமாக அறிவித்துள்ளான். “யாருடைய தூண்டுதலோ, நிர்ப்பந்தமோ இல்லாமல், எவ்வித அச்சமுமின்றி சுய நினைவோடு” தான் இந்த வாக்குமூலத்தை அளிப்பதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
ஐதராபாத்தின் சன்சல்குடா சிறையில் அசீமானந்தா அடைக்கப்பட்டபோது, அந்தச் சிறைக் கொட்டடியில் அவனுடன் இருந்த கைதியான கலீம் என்ற இளைஞர், வயதில் மூத்தவரான அவனுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, உணவு எடுத்து வந்து கொடுப்பது முதலான பல உதவிகளைச் செய்துள்ளார். ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பையொட்டி கைது செய்து சிறையிடப்பட்ட அப்பாவி இளைஞர்தான் கலீம். குண்டு வைத்த அசீமானந்தா, தன்னால் ஒரு அப்பாவி முஸ்லிம் இளைஞன் சிறையில் வதைபடுவதைக் கண்டு வருந்தியதாகவும், மனசாட்சி உலுக்கியதாகவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் உண்மைகளை வாக்குமூலமாக அளிப்பதாகவும் தெரிவித்துள்ளான்.
இப்பயங்கரவாதச் சதித் திட்டத்தில் முக்கியமானவனாகிய சுனில் ஜோஷி, கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களாலேயே கொல்லப்பட்டான். இக்குண்டுவெடிப்பு வழக்கில் மேலிருந்து கீழ்மட்டம் வரை சங்கிலித் தொடர்போல பலர் கைதாகி வருவதால், ஆர்.எஸ்.எஸ். தலைமை தனது விசுவாச ஊழியனையே கொன்றொழிக்க உத்தரவு பிறப்பித்திருக்க வாய்ப்புள்ளது. இதேபோன்ற நிலைமை தனக்கும் ஏற்படும் என்பதாலும், முஸ்லிம் இளைஞரால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் சேர்ந்துதான் அசீமானந்தாவை ஒப்புதல் வாக்குமூலத்துக்குத் தள்ளியிருக்க வேண்டும்.
கடந்த டிசம்பர் 20-ஆம் தேதியிட்டு அசீமானந்தா, இந்திய அரசுத் தலைவிக்கும் பாகிஸ்தான் அதிபருக்கும் பாவமன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளான். அதில், அஜ்மீர், மலேகான், ஐதராபாத், சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர்களில் நானும் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளான். ஐதராபாத்தின் சஞ்சலகுடா சிறையிலிருந்து அவன் எழுதிய இக்கடிதங்கள் இப்போது ஊடகங்களில் பகிரங்கமாகியுள்ளது.
***
பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் அசீமானந்தாவைச் சித்திரவதை செய்து கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், இந்துத்துவப் பயங்கரவாதம் என்ற அவதூறு கிளப்பப்படுவதாகவும் வழக்கம் போலவே கூச்சலிடுகின்றன. ஆனால் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமின்றி, வலுவான தடயவியல் ஆதாரங்களும் சி.பி.ஐ. விசாரணையில் கிடைத்துள்ளன. புதுப்புது அமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கி, இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை அத்தகைய அமைப்புகளின் பெயரால் நடத்தி வருவதை ஆர்.எஸ்.எஸ். ஒரு உத்தியாகக் கொண்டு இயங்கி வருவதும் இப்போது நிரூபணமாகியுள்ளது.
ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நோக்கியா செல்போனும் அதிலுள்ள வோடபோன் சிம் கார்டும் குண்டு வைக்கப்பட்ட இடத்தில் கிடைத்துள்ளன. இது, குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடிக்குமாறு செய்து அதன் மூலம் மின் இணைப்பு பெற்று குண்டுகளை வெடிக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்ப முறையாகும். இதேபோன்ற செல்போன் மூலமாக குண்டுகளை வெடிக்கச் செய்யும் முறையில்தான் சம்ஜவ்தா விரைவு வண்டியிலும் குண்டு வெடித்துள்ளது. மெக்கா மசூதியில் 6.53 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டது. அதே வகையான பேட்டரிகள்தான் சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுக்கான வார்ப்பு இரும்பு உலோகமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இத்தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் இக்குண்டுவெடிப்புகள் அனைத்திலும் ஒரு இந்துவெறி பயங்கரவாத கும்பல் ஈடுபட்டுள்ளதென புலனாவுத் துறையினர் அறுதியிட்டனர்.
செல்போன்கள் வாங்கப்பட்ட இடமும், வாங்கிய நபரின் பெயர் பாபுலால் யாதவ் என்பதும், போலியான ஆவணங்களைக் கொடுத்து இதேபெயரில் 11 சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தன. பாபுலால் யாதவ் வாங்கிய செல்போன்களின் குறியீட்டு எண்ணை வைத்து அவற்றில் நான்கு செல்போன்களை ராஜஸ்தானிலுள்ள ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்கள் பயன்படுத்தி வருவதை வைத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக பாரத் ரித்தேஷ்வர் உள்ளிட்ட இதர சதிகாரர்கள் சிக்கினர்.
இவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் முதலான பிற மாநிலங்களிலிருந்தும் இப்பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்களைத் திரட்டியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். மட்டுமின்றி அதன் பரிவாரத்தைச் சேர்ந்த பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத், அபிநவ் பாரத், ஜெ வந்தேமாதரம், வனவாசி கல்யாண் ஆசிரமம் முதலானவற்றிலிருந்தும் ஆட்களைப் பொறுக்கியெடுத்து மூன்று குழுக்களை உருவாக்கினர். இதன்படி, ஒரு குழு நிதி ஏற்பாடுகளையும் வாகன ஏற்பாடுகளையும் செய்யும். அடுத்த குழு, வெடிகுண்டுகளையும் தேவையான சாதனங்களையும் ஏற்பாடு செய்யும். கடைசியாக உள்ள குழு, குண்டு வைப்புகளில் ஈடுபடும். ஒரு குழுவினருக்கு மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இதனால் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இந்தச் சதித் திட்டத்துடன்தான் இப்பயங்கரவாதக் கும்பல் இயங்கியது என்பதும் இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி, 2002-இல் குஜராத் பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடங்கிவைத்த கோத்ரா எம்.எல்.ஏ.வான ஹரேஷ் பட்டுக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையில், டீசல் வெடிகுண்டுகளும் பைப் வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டு குஜராத் பயங்கரவாதப் படுகொலையின்போது இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன என்பதும், சபர்கந்தா மாவட்ட விசுவ இந்து பரிசத்தின் தலைவரான தவால் ஜெயந்தி பட்டேலின் கல்குவாரியில் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிகுண்டுகள் ஏராளமாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதும் ஏற்கெனவே ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது. மேலும், கடந்த 2007-ஆம் ஆண்டில் “தெகல்கா” வார இதழ் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிச பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறியாட்டத்தையும், இந்துவெறி பயங்கரவாதிகளிடையே ஊடுருவி அந்தக் கொடூரங்களை அரங்கேற்றியவர்களின் வாயிலிருந்தே மறுக்க முடியாத ஒப்புதல் வாக்குமூலங்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டு தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்து முன்னணி கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்பதும் நிரூபணமாகியுள்ளது.
உண்மைகள் அம்பலமானபோதிலும், ம.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததால் இந்துவெறி பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. நெருக்கடிகள் அதிகரித்த பின்னரே ம.பி. போலீசு வேறு வழியின்றி இந்துவெறி பயங்கரவாதிகளில் சிலரைக் கைது செய்தது. அஜ்மீர், மெக்கா மசூதி விசாரணைகளில் உண்மைகள் வெளிவந்துள்ள போதிலும், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் போலீசார் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆந்திராவிலும் ராஜஸ்தானிலும் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வதைக்கப்பட்ட பின்னர், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பாகிய போதிலும், வேறொரு பொய்வழக்கு சோடித்து அவர்களை மீண்டும் சிறையிலடைத்து வதைத்தது, இம்மாநிலங்களின் போலீசு.
இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.-இன் பயங்கரவாதம் அடுத்தடுத்து வெளியான போதிலும், ஒருசில ஆங்கில ஊடகங்கள் மட்டுமே இவற்றை வெளியிட்டுள்ளனவே தவிர, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அவை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்களும் நக்சல்பாரிகளும்தான் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே போலீசும் அதிகார வர்க்கமும் ஒருதலைப்பட்சமாக அணுகுகின்றன. மதச்சார்பற்றவர்களாகக் கூறிக்கொள்ளும் “இந்து’’க்களே கூட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இரகசிய குண்டுவைப்புகள் மூலம் அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் பயங்கரவாதச் செயல்களில் இறங்க மாட்டார்கள் என்றே இன்னமும் கருதுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை. உண்மைகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ள போதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இதுகுறித்து வாய்திறப்பதுமில்லை. இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், இந்நாட்டின் அரசியலமைப்பு முறையின் பிரிக்கமுடியாத அங்கமாக இந்துத்துவம் கோலோச்சுவதாலும் அரசும் ஓட்டுக்கட்சிகளும் ஊமையாகி நிற்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிரூபணமாகியிருப்பது மட்டுமல்ல; நாட்டுக்கும் மக்களுக்கும் பேரபாயமாகிவிட்ட இப்பயங்கரவாத கும்பலை கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவோ, சட்டரீதியாகவோ, ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் மூலமாகவோ வீழ்த்திட முடியாது என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றிணைத்துப் போராடுவதும், இக்கொடிய பயங்கரவாத மிருகங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதும், நேருக்குநேராக நின்று எதிர்த்து முறியடிப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் அவசர அவசியக் கடமையாகியுள்ளது.
_______________________________________
தனபால், புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2011
_______________________________________