Share

Monday, June 7, 2010

கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை)



சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய உலகளாவிய கட்டுரைப் போட்டியில் (ஹிஜ்ரி 1430) மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை

புகழனைத்தும் விண்ணையும் மண்ணையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!

எங்கே அமைதி?

அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கும் எண்ணற்ற அருட்கொடைகளில் மிகவும் சிறந்ததும், அனைவரும் விரும்புவதும் ‘அமைதி’ என்று சொன்னால் அது மிகையாகாது. காசு கொடுத்து வாங்க முடியாத பொருள் அது. மற்றவர்களை விடுங்கள், அமைதி மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய நம் சமுதாயத்தில் அமைதி இருக்கிறதா? இலட்சங்கள் அலட்சியமாகப் பறக்கும் ஆடம்பரத் திருமணங்கள் மணல் வீடாகக் கலைந்து போகும் அவலம் தினந்தோறும் நடக்கின்றன. இது ஒரு சமுதாயத்தின் அமைதியைக் குறிக்கிறதா? இல்லை! அலங்கோலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குடும்ப அமைப்பு சீர்குலைந்தால் மொத்த சமுதாயமுமே சீர் குலைந்து போகும். பின் எங்கே நிம்மதி? இந்நிலைக்குப் புற அம்சங்களைக் காரணம் காட்டாமல் நம் தாழ்வுக்கு நாமே காரணம் என்ற பொறுப்புணர்வுடன் எங்கே தவறினோம் நாம்? என்ற சுய அலசலிலும் இந்நிலையை எப்படி சரி செய்வது என்ற ஆரோக்கியமான அணுகுமுறையிலுமே ஈடேற்றம் பெற முடியும்.

திருமணம் தீனில் ஒரு பகுதி

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம் என்பது பொது விதி. ஆனால் இஸ்லாம் ஒருபடி மேலே போய் ‘ஒருவன் திருமணம் புரிந்தால் அவன் இறைமார்க்கத்தில் ஒரு பகுதியை நிறைவேற்றி விட்டான். எஞ்சியவற்றில் அவன் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளட்டும்.’ (பைஹகி) என்று கூறுகிறது. இன்னும் ஒரு நபிமொழி இக்கருத்தை வலியுறுத்துகிறது. ‘திருமணம் என் வழிமுறை (சுன்னத்). என் வழிமுறையைப் புறக்கணித்தவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர்.’ (இப்னு மாஜா)

திருமணத்தால் அமைதி கிடைக்கிறது

‘அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன’ (அல்குர்ஆன் 30:21)

இந்த வசனத்தைப் படித்தால் மட்டும் போதாது சிந்திக்க வேண்டும்..

குழந்தைகள் தான் திருமண வாழ்வின் பரிசு. அவர்கள் பெற்றோர்களுக்குக் கண்குளிர்ச்சியாகவும், பரபரப்பான வாழ்வில் அமைதி கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இறைவன் அனுமதித்த முறையில் இனவிருத்திக்கும் திருமணமே சிறந்தது என்பதை கீழ்வரும் வசனம் உணர்த்துகிறது.

‘மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்.’ (அல்குர்ஆன் 4:1)

கொடுப்பது

கீழே உள்ளவை, நம்பிக்கையாளர்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய இரு ஒளிகளாகிய குர்ஆன், ஹதீஸ் இவற்றில் ‘கொடுப்பது’ பற்றி உள்ள செய்திகள், கட்டளைகள்.

‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)

‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன் 33:50)

‘பெண்களை நீங்கள் தீண்டுவதற்க்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்க்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் – அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.’ (அல்குர்ஆன் 2:236)

‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’ (அல்குர்ஆன் 4:24)

‘எந்த நிபந்தனையின் வாயிலாக நீங்கள் பெண்களின் கற்புக்கு உரிமையாளர்களாய் ஆகிறீர்களோ அதுவே மற்றெல்லா நிபந்தனைகளை விட முன்னதாக நிறைவேற்றிட உரிமை பெற்ற நிபந்தனையாகும்.’ (நபிமொழி – புகாரி, முஸ்லிம்)

எடுப்பது

கொடுப்பதைப் பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறியுள்ளவற்றைப் பார்த்தோம். ‘எடுப்பது’ என்பதைப் பற்றி, அதாவது திருமணம் செய்யப் போகும் பெண்ணிடமிருந்தோ அவளுடைய பெற்றோரிடமிருந்தோ ‘எடுப்பது’ பற்றி ஏதாவது இருக்கிறதா என்று குர்ஆனின் 114 அத்தியாயத்திலும் தேடினாலும் ஒரு வசனம் கூட கிடைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது, தோட்டம், திர்ஹம், தங்கம் இவை மட்டுமல்லாமல் இரும்பு மோதிரம், கேடயம் ஏன் மனப்பாடம் செய்த சூராவைக் கூட மஹராக ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பவங்களைப் பார்க்கிறோம். ஆனால் பெண் இத்தனை பவுன் நகை, சீர் வரிசை, பலகாரங்கள், இத்தியாதிகள் இவற்றுடன் கணவன் வீட்டுக்குச் சென்றாள் என்று எந்தக் குறிப்பும் இல்லை.

‘எடுப்பது’ எப்படி வந்தது?

பெண் வீட்டாரிடமிருந்து வாங்குவது என்பது மற்ற சமுதாயத்தினரின் செயல். பெண் என்றால் சீதனத்துடன் தான் கணவன் வீட்டிற்குச் செல்ல வேண்டும், மாப்பிள்ளைக்கு வரதட்சணை தர வேண்டும் என்பதெல்லாம் ‘அவர்கள்’ சம்பிரதாயங்கள். இறைவேதத்தையும், நபிவழியையும் முதுகுக்குப் பின்னால் தூக்கிப் போட்டு விட்டு ‘அவர்களை’ப் பின்பற்ற ஆரம்பித்து விட்டோம் நாம்.

ஒரு பேச்சாளர் ‘இப்போது நடக்கும் திருமணங்கள் வியாபாரம் போல் ஆகிவிட்டன.’ என்று குறிப்பிட்டார். இது என்னைச் சிந்திக்க வைத்தது – வியாபாரம் என்றால் பணத்தைக் கொடுத்து ஒரு பொருளை வாங்குவது அல்லது பொருளை விற்று பணத்தைப் பெறுவது. சரி, நம் கையை விட்டுப் பணம் போகும் போது பொருள் நம் கைக்கு வர வேண்டும் – அது தான் வியாபாரம். ஆனால், திருமணத்தில் பணம் நம் கையை விட்டுப் போகிறது, பெண்ணும் போகிறாள், ஆனால், நம் கைக்கு எதுவும் வருவதில்லை. இது எந்த வியாபார விதிக்கும் உட்பட்டதாக இல்லையே.. மோசடி வியாபாரமாக அல்லவா இருக்கிறது!

சந்தையில் மாடு விற்பவன் கூட மாட்டைக் கொடுத்து விட்டுப் பணத்தை எண்ணி வாங்கிக் கொள்கிறான். ஆனால் பெண்ணைப் பெற்றவனோ, பெண்ணையும் கொடுத்து, பொன்னையும் கொடுத்து, சீர் என்ற பெயரில் புழங்குவதற்கு சாமான்களையும் கொடுத்து, பிறகு பணத்தையும் கொடுக்கிறான்.. நம் பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்?

இதை பெண்களும் யோசிக்க வேண்டிய விஷயம்.. பொன்னோடும், பொருளோடும் மாமியார் வீட்டுக்குப் போவது தான் பெருமை என்ற எண்ணத்தை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனோ தெரியவில்லை நம் சகோதரர்களுக்கு தவ்ஹீத் சிந்தனை திருமணமான பிறகு தான் வருகிறது. வாங்கிய வரதட்சணையைத் திருப்பிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இந்த விழிப்புணர்வு திருமணத்திற்கு முன்பே வந்திருந்தால் வரதட்சணை கொடுக்க வசதியற்ற பெண்ணுக்கு வாழ்வு கிடைத்திருக்கும்.

மறைமுகமாக எடுப்பது

வரதட்சணை என்று ரொக்கமாக வாங்காவிட்டால் தாங்கள் நபிவழியில் திருமணம் புரிந்ததாக சிலர் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள். மார்க்கத்தில் இல்லாத நூதன விழாக்களால் பெண் வீட்டிற்கு எத்தனை வீண் செலவுகள்! பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம், மருதாணி விழா, ஆடம்பரமான மண்டபம் அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நிக்காஹ் விருந்து, மறு வீடு என்று விருந்துக்கு மேல் விருந்தாகவும், பலகார வகைகள், சீர் என்று வித விதமான செலவினங்கள். கட்டில், பீரோ, ஏசி, ஃபிரிஜ் என்பதெல்லாம் காலத்தின் கட்டாயமாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கம் விற்கும் விலையில் படித்த மாப்பிள்ளை என்றால் குறைந்த பட்சம் ஐம்பது பவுன் என்பது எழுதாத சட்டமாகி விட்டது. இத்தனையையும் கேட்டு வாங்கினால் தானே தவறு? கேட்காமலேயே வரக்கூடிய இடமாகப் போய் பெண் எடுத்தால் வம்பில்லையே.. ‘வீண் செலவு செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்’ (அல்குர்ஆன் 17:27) என்ற திருவசனம் இவர்களின் மனதில் பதியவில்லையா? அல்லது, ‘வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.’ (அல்குர்ஆன் 7:21) என்ற வசனத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்களா? அல்லது, ‘குறைந்த செலவில் குறைந்த சிரமத்துடன் செய்யப்படும் திருமண நிகழ்ச்சியே சிறந்ததாகும்.’ என்ற நபிமொழியைக் காலத்துக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி விட்டார்களா?!!

விளைவுகள்

இன்றைய திருமணங்கள் இறையச்சத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? அல்லாஹ் திருமறையில், வட்டியைப் பற்றி, ‘யார் வட்டி வாங்கித் தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்டவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாக) எழ மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள் ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்…’ (அல்குர்ஆன் 2:275) என்றும் ‘ஈமான் கொண்டோரே, இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.’(அல்குர்ஆன் 3:130) என்றும் கூறி நம்மைக் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.

இருந்தாலும், பலர் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் எல்.ஐ.சி.இன் திருமகள் திருமணத் திட்டம் என்று வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் சேமிக்கத் தொடங்கி விடுகின்றனர். காரணம், அப்படி சேர்க்கும் தொகை அவள் திருமண வயதில் வட்டியோடு குட்டி போட்டு பெருந்தொகையாக இருக்கும். இப்படி ஹராமாக சேர்த்த பணத்தையோ, அல்லது வட்டிக்கு கடன்பட்டோ தான் கைக்கூலியாகவும், நகையாகவும், சீராகவும், கொடுக்கிறார்கள். நினைத்துப் பார்த்தால் அருவருப்பாக இல்லை? ஒருவன், ஹராமான வழியில் பொருளீட்ட காரணமாயிருப்பது யார் என்று யோசித்துப் பாருங்கள். மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சிக் கொள்ளுங்கள்.

ஹஜ் செய்வது இஸ்லாத்தில் கட்டாயக்கடமை. அதாவது பொருள் வசதியும், உடல்வலிமையும் உள்ளவர்கள் செய்ய வேண்டிய கடமை. ஆனால், உடலில் வலு இருந்தும்;, கையில் வழிச்செலவுக்குப் போதுமான பணம் இருந்தும் புனித பயணத்தைத் தள்ளிப் போட அவர்கள் காரணம் காட்டுவது திருமணத்திற்குப் பெண் இருக்கிறாள். அவளுடைய திருமணக் கடமையை முடித்த பின்பே ஹஜ் செய்ய வேண்டும் என்பதை மார்க்கச் சட்டமாக ஆக்கி விட்டார்கள். மரணம் முந்திக் கொண்டால் ஹஜ் செய்ய முடியாமலே ஆகிவிடும். இதற்கு யார் காரணம் என்பதை சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

ஏழ்மை அல்லது கொள்கைப் பிடிப்பின் காரணமாகவோ வரதட்சணை கொடுக்க முடியாத வீட்டுப் பெண்களில் சிலர் மாற்று மதத்தவர்களைக் கூட மணந்து வாழ்கிறார்கள். ‘இணை வைக்கும் ஒருவனை மணத்தல் கூடாது’ என்பது இறை கட்டளை. அதை மீற காரணம் யார்?

அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்துள்ள நாம், எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! ஆனால், துரதிரூஷ்டவசமாக நாம் அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா? அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ள இஸ்லாமியத் திருமணம் வீண் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத எளிய, அழகிய வாழ்க்கை ஒப்பந்தம். பிறப்பிலிருந்து இறப்பு வரை குர்ஆனும், நபிவழியும் சொல்கிறபடி வாழக் கடமைப்பட்டவர்கள் நாம். மாற்றுமதத்தினரின் வீண் சம்பிரதாயங்களை பின்பற்ற ஆரம்பித்ததனால் நம் சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்கள்!

பெண் தேடும் போது, தன்னை விட உயரமான பெண்ணை மணக்க ஒரு ஆண் விரும்புவதில்லை. தன்னை விட உயரம் குறைந்த பெண்ணையே மணக்க விரும்புகிறான். மனோதத்துவரீதியாகப் பார்த்தால், இதற்குக் காரணம், தன் மனைவியை விட தான் உயர்ந்திருக்க வேண்டும், அவள் அன்னாந்து பார்க்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான். உடலளவில் மட்டும் உயர்ந்திருந்தால் போதுமா? உள்ளத்தால் உயருதல் தான் மனிதனுக்கு அழகு. ஒரு பெண்ணும் தன் கணவன் அப்படி உள்ளத்தால் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள். அப்படிப்பட்டவனையே மதிப்பாள். இஸ்லாம் காட்டும் வழிபடி, மஹர் கொடுத்து மணம் முடித்து, உங்களால் இயன்ற அளவு வலிமா விருந்து கொடுத்து உயர்ந்து காட்டுங்கள். உங்கள் இல்லத்திற்குத் தேவையானதை உங்கள் உழைப்பில் வாங்குவது தான் பெருமை.

இன்று எந்த லாபமும் கருதாமல் ஒரு பெண்ணை மணந்தால், அடுத்த தலைமுறையும் திருந்தும். இந்தப் ஈனப் பழக்கம் வேரோடு அழிந்து விடும். நம் உடலை விட்டு உயிர் பிரிந்த வினாடியே நாம் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாமல் போய்விடும். கபன் துணியைத் தவிர நம்முடைய எந்தப் பொருளும் நம்முடன் வரப்போவதில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘எடுப்பது’ என்பது மாற்றார் வழி.. ‘கொடுப்பது’ மட்டுமே நம் வழி

CELL

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம்.

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)

7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)

மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது

Sunday, June 6, 2010

சின்ன வார்த்தையில் பெரிய அர்த்தங்கள்

கடந்த தொடரில், கருக் குழந்தையின் பாலைத் தீர்மானிப்பது ஆண் விந்தணுதான் என்று இறைமறையில் சொல்லப்பட்டிருக்கும் அறிவியல் உண்மையை அதனுடைய ஆதாரத்துடன் பார்த்தோம். இந்த அறிவியல் உண்மை நபி மொழியிலும் இடம் பெற்றிருக்கிறது. அது எவ்வாறு இடம் பெற்றிருக்கிறது என்பதினை உங்கள் முன் தருவதில் பெருமிதம் அடைகிறேன்.

ஒரு குறிப்பட்ட காலத்தில் வாழந்திருந்த ஒரு மனிதரால் எல்லாக்காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் பேச, எழுத முடியாது, அவரது காலத்திலும், அதனைத் தொடர்ந்த சில காலங்களிலும் வாழ்ந்தவர்களால் மட்டும் புரிந்து கொள்ளும் விதத்தில்தான் அவரது பேச்சுகள், எழுத்துக்கள் அமைந்திருக்கும். குறிப்பிட்ட காலம் சென்றதும் அவரது பேச்சுக்கள், எழுத்துக்கள் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாததாக, அல்லது வார்த்தைப் பிரயோகம் மாறிவிட்டதாக ஆகிவிடுகிறது. அதனைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அதற்காக தனி விளக்கவுரை அவசியப்படுகிறது. இதற்கு எடுத்துக் காட்டுகள் நமது நடைமுறையில் ஏராளம் உண்டு. இடம் சுருக்கம் கருதி இங்கு எழுதுவதைத் தவிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆனால் 1430 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பேசிய வார்த்தைகள், அவரது மொழி பேசும் இன்றுள்ள அனைவராலும் மிக எளிதில் புரிந்து கொள்ளும் படியாக அமைந்திருக்கிறது. இது அவர்களது வார்த்தைகளுக்கு இறைவன் வழங்கிய அற்புதமாகும். காரணம் அவர்களது அந்த வார்த்தைகள் வஹி அறிவிக்கப்படாத இன்னொரு குர்ஆனாக திகழ்கிறது. அஹ்மது, மற்றும் அபூ தாவூத் ஆகிய நூட்களில் இடம் பெற்றுள்ள குர்ஆனும், அது போன்ற இன்னொன்றும் எனக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய செய்தி இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. குர்ஆன் எல்லோரும் புரிந்து கொள்ளும் பொருட்டு எளிமையாக்கப்பட்டு, இறைவனால் பாதுகாக்கப் பட்டுவருவது போல, நபியவர்களின் அர்த்தமுள்ள வார்த்தைகளும் அனைவரும் புரிந்து கொள்ளும் பொருட்டு, எளிமையாக்கப்பட்டு, இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்ஷா அல்லாஹ் அது இனிமேலும் தொடரும். மேலும் அவர்களது வார்த்தைகளிலிருக்கும் அர்த்தமுள்ள போதனைகள் அனைத்து நாட்டவருக்கும், அனைத்து காலத்தில் வாழ்பவர்களுக்கும் பொருந்தி வரக்கூடியதாகவே அமைந்துள்ளன.

குறைந்த சொற்களால் நிறைந்த பொருள்கள் தரும் பேச்சுக்கு சொந்தக்காரராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள்.

இதனையே அவர்கள் பின் வருமாறு சிலாகித்து கூறுவதைக் கேளுங்கள்.

عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ ، وَنُصِرْتُ بِالرُّعْبِ ، فَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ ، فَوُضِعَتْ فِى يَدِى . رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருங்கினைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பட்டுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு உதவப் பட்டுள்ளது. (ஒரு முறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்கள் கொண்டுவரப்பட்டு, என் கையில் வைக்கப்பட்டன. நூல்: புஹாரி.

இந்த நபி மொழியில் ஒருங்கினைந்த பொருள்களைத் தரும் சொற்கள் என்பதற்கு பல அர்த்தம் கொள்ள முடியும். அதாவது குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகிப் போகாமல் எல்லாக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும்படியான ஒருங்கினைத்த வார்த்தை என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம். அதே போல், குறைந்த சொற்களால் நிறைந்த பொருள்கள் தரும் பேச்சு என்றும் அதனைப் புரிந்து கொள்ளலாம்.

அதே போல், சாதாரணப் அர்த்தத்தை பிரிதி பலிக்கும் அவர்களது வார்த்தையானதுஅறிவியல் உண்மையையும் உள்ளடக்கி இருக்கும் எனவும் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பல அறிவியல்உண்மைகளையும் பேசியிருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் பலஅறிவியல்உண்மைகளை 1430 ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருக்கிறார்கள் என்பது வியப்பிலும் மிகப் பெரும் வியப்பாக இருக்கிறது.

அவர்கள் பேசிய அந்த அறிவியல் உண்மைகள் அவர் ஒரு இறைத்தூதர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரங்களில் மிக முக்கிய ஒன்றாக இன்றும் திகழ்கிறது. அன்றைக்கும், இன்றைக்கும் நபிகளாரின் வார்த்தைகளில் உள்ள அந்த அறிவியல் உண்மையை அறிந்தவர்கள் பலரும் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ற வரலாறு பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுருங்கிச் சொல்லி நிறைய கருத்துகள் கூறும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், அறியாமைக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் அமைப்பில் பல அறிவியல் உண்மைகளை மிக எளிமையாகக் கூறியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் நாம் எழுதி வரும் கருயியல் அறிவியல் குறித்து அவர்கள் கூறியிருக்கும் ஒரு தகவல். இதோ! அதனை உங்களுக்கு முன் சமர்பிக்கிறேன்.

عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم أنه قال كنت قائما عند رسول الله صلى الله عليه وسلم فجاء حبر من أحبار اليهود فقال السلام عليك يا محمد فدفعته دفعة كاد يصرع منها فقال لم تدفعني فقلت ألا تقول يا رسول الله فقال اليهودي إنما ندعوه باسمه الذي سماه به أهله فقال رسول الله صلى الله عليه وسلم إن اسمىمحمد الذي سماني به أهلي فقال اليهودي جئت أسألك فقال له رسول الله صلى الله عليه وسلم أينفعك شيء إن حدثتك قال أسمع بأذني فنكت رسول الله صلى الله عليه وسلم بعود معه فقال سل فقال اليهودي أين يكون الناس يوم تبدل الأرض غير الأرض والسماوات فقال رسول الله صلى الله عليه وسلم هم في الظلمة دون الجسر قال فمن أول الناس إجازة قال فقراء المهاجرين قال اليهودي فما تحفتهم حين يدخلون الجنة قال زيادة كبد النون قال فما غذاؤهم على أثرها قال ينحر لهم ثور الجنة الذي كان يأكل من أطرافها قال فما شرابهم عليه قال من عين فيها تسمى سلسبيلا قال صدقت قال وجئت أسألك عن شيء لا يعلمه أحد من أهل الأرض إلا نبي أو رجل أو رجلان قال ينفعك إن حدثتك قال أسمع بأذني قال جئت أسألك عن الولد قال ماء الرجل أبيض وماء المرأة أصفر فإذا اجتمعا فعلا مني الرجل مني المرأة أذكرا بإذن الله وإذا علا مني المرأة مني الرجل آنثا بإذن الله قال اليهودي لقد صدقت وإنك لنبي ثم انصرف فذهب فقال رسول الله صلى الله عليه وسلم لقد سألني هذا عن الذي سألني عنه ومالي علم بشيء منه حتى أتاني الله به رواه مسلم

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஃதவ்பான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இறைத்தூதர் அருகில் நின்று கொண்டிருக்கும் போது, யூத அறிஞர் ஒருவர் வந்து முஹம்மதே! அஸ்ஸலாமு அலைக்க (உன் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினார். (அதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த) நான் அவரைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். நிலை தடுமாறி விழப்போன அவர், ஏன் என்னைத் தள்ளுகிறாய்? என்று கேட்டார். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே என்று நீ சொல்லக் கூடாதா? (முஹம்மதே! என்று பெயர் கூறி அழைக்கிறாயே அதனால்தான் தள்ளினேன்) என்றேன். அதற்கு அந்த யூதர் அவருக்கு அவரின் குடும்பத்தினர் சூட்டிய பெயர் கொண்டுதான் நாங்கள் அழைப்போம் என்று கூறினார். (இதனைக் கண்டு கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ஆம்! எனது பெயர் முஹம்மத்-தான் இதுவே எனது குடும்பத்தினர் இட்ட பெயராகும் என்றார்கள்.

பின்பு, யூத அறிஞர் உங்களிடம் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காகவே வந்தேன் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நான் கூறப் போகும் எந்த விஷயமும் உமக்கு பயனளிக்குமா? எனக் கேட்டார்கள். செவி சாய்த்துக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் வந்த யூதர். தன்னிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறிக் கொண்டே (ஆழ்ந்த சிந்தனையுடன்) கேளுங்கள் என்றார்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்.

“இந்த பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்?”, என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (அஸ்ஸிராத் எனும்) பாலத்தின் அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள்.

மக்களிலேயே முதன் முதலில் (அப்பாலத்தைக்) கடப்பவர்கள் யார்? என்று அடுத்து வினவினார் அந்த யூதர். ஏழை முஹாஜிரீன்கள் (மக்காவைத் துறந்து மதீனா வந்து குடியேறிய அகதிகள்) என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அவர்கள் சுவனத்தில் நுழையும் போது வழங்கப்படும் வெகுமதி என்ன? என்று வினவினார். அதற்கு மீனின் ஈரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித்துண்டு எனப் பதிலளித்தார்கள். அதன் பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன? என்று அவர் கேட்க, சுவனத்தின் ஓரங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் காளை மாடு அவர்களுக்காக அறு(க்கப்பட்டு விருந்தளி)க்கப் படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள் என்று அவர் வினவினார். அதற்கு அங்குள்ள ஸல்ஸபீல் என்றழைக்கப்படும் நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்த போது, நீர் கூறியது முற்றிலும் உண்மையே என்றார் அந்த யூதர்.

பூமியில் வசிப்பவர்களில் ஒர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே உம்மிடம் நான் வந்தேன். என்று கூறினார். நான் கூறப்போகும் விஷயம் உமக்குப் பயன் தருமா? என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். செவி சாய்த்துக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

குழந்தை(யின் பிறப்பு) குறித்து கேட்பதற்காக நாம் உம்மிடம் வந்தேன் என்றார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆணின் நீர் (விந்தணு) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவை இரண்டும் சேரும் போது ஆணின் நீர் (விந்தணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்து விட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும், பெண்ணின் நீர் (சினை முட்டை) மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும் என்று கூறினார்கள். அந்த யூத அறிஞர் நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஒர் இறைத்தூதர்(நபி)தாம் எனக் கூறி விட்டு திரும்பிச் சென்று விட்டார்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், இவர் எதைக் குறித்து என்னிடம் கேட்டாரோ அவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துக் கொடுத்தான் என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம்.

இந்த நபி மொழியினை சற்று ஆழ்ந்த சிந்தனையோடு மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். இன்றைய 21-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல் உண்மையைகளை மிக எளிமையாகவும், அதே நேரத்தில் அறியாமைக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் விதத்திலும் கூறப்பட்டிருப்பது தெரியவரும்.

மேலும், குழந்தை உருவாக்கத்திற்கு ஆண் விந்தணுவின் நிறமும், பெண்ணின் மதனநீரின் நிறமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்னொரு நபி மொழியில் ஆணின் விந்தணு கெட்டியாகவும், வென்மை நிறமுடையதாகவும், பெண்ணின் மதன நீர் மெருதுவாகவும், மஞ்சள் நிறமுடையதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆரோக்கியமான குழந்தை உருவாக வேண்டுமானால் ஆணின் விந்து கெட்டியாகவும், வென்மையாகவும் இருக்க வேண்டும். காரணம் அதில்தான் வீரியமுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும், அதனால் குழந்தை தரிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். பெண்ணின் விந்து மெருதுவாகவும், மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும். அப்போது தோன்றும் கருமுட்டை முழு வளர்ச்சி அடைந்ததாக இருக்கும். அப்போது தன்னை நோக்கி வரும் உயிரணுவை முழு அளவில் ஏற்றுக் கொண்டு குழந்தை உருவாக காரணமாக அமைகிறது.

ஆணின் விந்து கெட்டி குறைந்ததாகவோ, அல்லது நிறமாறியதாகவோ இருக்குமானால் அவனது விந்துவில் உள்ள உயிரணுக்கள் வீரியம் குறைந்ததாகவும், எண்ணிக்கை குறைந்தாகவும் இருக்கும். அதனால் குழந்தை தரிக்க வைக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அதுபோல், பெண்ணின் விந்து, அதன் தன்மையிலோ, நிறத்திலோ மாறுபட்டிருக்குமானால் குழந்தை தரிப்பதில் தடங்கல்கள் பலவும் ஏற்படும் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.

அடுத்து, இந்த நபி மொழித் தொடரில், இரண்டும் கலந்து விடும் போது என்று நபியவர்கள் கூறியதன் மூலம், குழந்தை உருவாகுவதற்கு ஆண் பெண் ஆகிய இருவரின் விந்துவும் அவசியம் என்பதை எளிமையாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இந்த உண்மையை கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்புவரை இன்றைய அறிவியல் உலகில் யாருமே அறிந்திருக்க வில்லை. அதற்குப் பிறகுதான் இந்தச் செய்தியினை ஆய்வு செய்து அறிந்து கொள்ள முனைந்தார்கள்.

நபி மொழியில் மோதல் போக்கா?

இந்த நபி மொழியில் சொல்லப்பட்டிருக்கும் தகவலை மேலோட்டமாக படித்துப் பார்க்கும் போது, குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துடன் மோதுவது போன்றும், இன்றைய அறிவியல் உண்மைக்கு மாறு பட்டிருப்பது போன்றும் தோன்றலாம்.

காரணம், குழந்தையின் பாலைத் தீர்மானிப்பது ஆணின் விந்தணுதான் என்று குர்ஆன் கூறிக் கொண்டிருக்கிறது. இதனையே இன்றைய அறிவியல் உலகமும் உறுதிப்படுத்தி உள்ளது.

ஆனால், நபி மொழியில் இடம் பெற்றிருக்கும் கருத்து அதற்கு மாறுபட்டிருப்பதாக சிலருக்குத் தோன்றலாம். ஏனெனில், ஆணின் விந்து பெண்ணின் விந்தினை மிகைத்து விட்டால், அப்போது அல்லாஹ்வின் அனுமதியின் படி குழந்தை ஆணாகவும், பெண்ணின் விந்து ஆணின் விந்தை மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் அனுமதியின் படி குழந்தை பெண்ணாகவும் உருவாகும் என்று கூறும் போது குழந்தையின் பாலைத் தீர்மனிப்பது ஆண்விந்தணுவிற்கு இருக்கும் அதே பங்களிப்பு பெண்ணின் விந்துவிற்கும் உண்டு என்றுதானே விளங்குகிறது என்று கருத இடம் உண்டு.

இது போன்ற ஐயங்கள் தோன்றுவதற்கு காரணம் இந்த நபி மொழியின் சரியான பொருளை சரிவர புரிந்து கொள்ளாமையே. எனவே, இந்த நபி மொழியின் பொருளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நபி மொழி, இன்னொரு நபி மொழிக்கு விளக்கமாக அமைகிறது என்பதால், கருயியல் குறித்து வந்திருக்கும் வேறு நபி மொழிகளையும் பார்க்க வேண்டும். அப்போது மேற் கூறப்பட்ட நபி மொழி எந்தக் கருத்தை வலியுறுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

இது குறித்த விரிவான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்பு, பெண்ணின் கருவறை அமைப்பினையும், அங்கு எவ்வாறு கருத்தரிக்கிறது, கருத்தரிக்கும் போது அங்கு என்ன என்ன நிகழ்கிறது என்பது குறித்து புரிந்து கொள்வது மிக அவசியமானதாகும். அப்போதான் இந்த நபி மொழியின் பொருளை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.